Subscribe Us

header ads

ஊனமுற்ற முதியவருக்கு உணவூட்டிய விமான பணிப்பெண்: பறக்கும் விமானத்தில் நெகிழ்ச்சி சம்பவம் (PHOTOS)

சீனாவில் பறக்கும் விமானத்தில் ஊனமுற்ற முதியவர் ஒருவருக்கு விமான பணிப்பெண் ஒருவர் உணவூட்டிய நெகிழ்ச்சி சம்பவம் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
சீனாவின் ஜெங்ஷோ பகுதியில் இருந்து ஹைக்கோ பகுதிக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
உணவு நேரத்தின் போது அந்த விமானத்தின் பணிப்பெண்களில் ஒருவரான Fan பயணைகளுக்கு உணவுகளை வழங்கி வந்துள்ளார்.
உணவுத் தட்டுகளை பெற்றுக்கொண்ட பயணிகள் அதை அருந்துவதையும், அவர்களது தேவை என்ன என்பதையும் Fan ஒவ்வொருவராக கேட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் Niu எனும் 71 வயதான முதியவர் தளர்வாதம் காரணமாக சக்கர நாற்காலியில் அமர்ந்து பயணம் செய்து வந்துள்ளார்.
அவரது அருகில் வந்த Fan அவருக்கு உணவூட்டிவிட அனுமதிக்க முடியுமா என கேட்டுள்ளார். தளர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட அந்த முதியவர் இதை கேட்டதும் கண்களில் நீர் வழிய அந்த பணிப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதியவரின் அனுமதியுடன் அவருக்கு உணவூட்டிய Fan அரிசி உணவு அவருக்கு கடினமாக இருக்கும் என்பதால் நூடுல்ஸ் உணவை அவருக்காக வழங்கியுள்ளார்.
முதியவரின் மனைவியும் அந்த விமானத்தில் அவருடன் பயணம் செய்த போதும், இருவருக்கும் தனித்தனியாக இருக்கைகள் அமைந்ததால், உணவு வேளையில் உதவ முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சக பயணி ஒருவர் தமது கெமராவில் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அந்த பதிவினை தற்போது சீன மக்கள் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டது மட்டுமின்றி பலருக்கும் பகிர்ந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த Niu, தம்மால் அந்த நேரத்தில் எதுவுமே பேச முடியவில்லை எனவும், கண்ணீர் மட்டுமே அந்த நெகிழ்ச்சி சம்பவத்திற்கு பதில் என்றும் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments