Subscribe Us

header ads

பயறு வகைகள் சாப்பிடுங்கள்....கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

குழந்தைகள், கர்ப்பிணிபெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவரும் பயறு வகைகளை சாப்பிடுவது அவசியம் ஆகும்.
பயறு வகைகளில், புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பயறு வகைகளை சாப்பிட்டு ஆரோக்கிய வாழ்வை பெறுங்கள்.
பச்சைப்பயறு
புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.
இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு. மலச் சிக்கலைப் போக்கும்.
மொச்சைப்பயறு
புரதம், மாவுச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக இருக்கின்றன. இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், விட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், நார்ச்சத்து ஆகியவை ஓரளவு இருக்கின்றன.
சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம்.
சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும், மலச்சிக்கலைப் போக்கும்.
தட்டைப்பயறு
புரதம், கலோரி, மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், ஃபோலிக் ஆசிட், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடிய தன்மை இதற்கு உண்டு. வயிற்றில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
வாயுப்பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.

Post a Comment

0 Comments