![]() |
| FILE PICTURE |
சொந்த நாட்டை விட்டு பல இலட்சக்கணக்கானோர் கத்தாரில் தொழில் புரிகிறார்கள். இவர்களூடாகப் பெறப்படும் அந்நியச்செலாவணி நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே நேரத்தில், இங்கு தொழில் புரிகின்ற சமயத்தில், அவர்களுடைய வேலைத்தளங்களில் கத்தார் நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கப்பால் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி பாதிக்கப்படுகின்றனர். அந்தப் பிரச்சினைகளை தனது கம்பனிகளோ தொழில் வழங்குனர்களோ கவனஞ்செலுதுத்தாத விடுத்து, கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் உதவியை நாடி அங்கே முறையிட வேண்டியுள்ளது.
அவ்வாறு கத்தாரில் வாழும் இலங்கையர்கள் தமது கம்பனிகளில் தனக்கு நடக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவோ அல்லது தனது சுய தேவைகளுக்காகவோ கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தை நாட வேண்டியேற்பட்டால், அங்குள்ள இலங்கைத் தூதரக ஊழியர்கள் உரிய முறையில் தொழிலாளிகளின் வேளைகளில் கவனஞ்செலுத்துவதில்லை என எம்மால் அறியக்கிடைத்தது.
அங்கு செல்லும் தொழிலாளிகள் அதிக நேரம் காத்துக் கிடக்க வேண்டியுள்ளதுடன், வந்த காரியங்களைக் கூட செய்து கொள்ள முடியாது கைசேதத்துடன் திரும்ப வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. ஒரு நாளைக்கு 100 பேரைத் தான் அனுமதிக்கிறார்கள். அத்துடன், அங்கு ஆங்கில மொழி தவிர்ந்த தமிழ், சிங்களம் மொழிகளில் தங்களது பணிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஒரு போட்டோ பிரதிக்கு 1 கத்தார் றியால் அறவிடப்படுகின்றது. இலங்கை நாணய மதிப்பில் சுமார் 38 ரூபாயாகும், இதன் மூலம் தினமும் பணம் அறவிடப்பட்டாலும், அதற்கான எந்தப்பற்றுச்சீட்டும் வழங்கப்படுவதில்லை. அத்தோடு, பணி நிமித்தம் அங்கு செல்லும் பணியாளர்கள் அமர்ந்திருக்க போதியளவான கதிரைகளோ இடவசதிகளோ சூடான காலநிலையை ஈடுகொடுக்குமளவிற்கு குளிரூட்டி வசதிகளோ செய்து கொடுக்கப்பட்டவில்லை.
அத்துடன், பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவர்களாக தீர்வை எதிர்பார்த்து தூதரகத்தின் உதவியை நாடிச் செல்லும் தொழிலாளர்களை சரியான முறையில் கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இவ்வாறான பாரிய பிரச்சினைகளை, பல்வேறு இன்னல்களை கத்தார் வாழ் இலங்கையர்கள் எதிர்கொள்கிறார்கள்.
தூதரகத்தின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தூதரகத்தின் உதவியை நாடிச் சென்றவர்கள் அதிருப்தி வெளியிடுவதைக் கண்ணூடே காணக்கூடியதாகவுள்ளது அத்துடன் இங்கு தொழில் புரியும் தொழிலாளர்களை இரண்டாந்தர குடிமக்களாக அவர்கள் நோக்குகிறார்களோ எனத் தோன்றுகிறது.
இங்கு தொழில் புரியும் தொழிலாளர்களின் நன்மைக்காக தூதரகம் என்பதை விடுத்து, அதற்கு நேர்மாறாக உள்ளதையே காணக்கூடியதாகவுள்ளது. நீதியற்ற சேவை, தமிழ் பேசும் மக்களுக்கான சேவையில் அசமந்தப்போக்கு, கட்டணங்கள் பணமாக மாத்திரமே செலுத்தப்படல் வேண்டும் . ஏனைய Pay Card வசதி இன்னுமில்லை என்ற பல குறைபாடுகள் முன்வைக்கபடுகின்றன.
அத்துடன், கத்தாரில் குழந்தை பிறந்தால் கத்தார் அரசாங்கத்தினால் இலகுவாக பிறப்பு சம்பந்தமான பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ள நிலையில், தூதரகத்திடம் சென்றால் ஏன் பிள்ளை பெற்றோம் என்றளவிற்கு இவர்களுடைய நடவடிக்கை காணப்படுகின்றது.
ஆகவே, கத்தாரில் தொழில் புரிந்து இலங்கைக்கு வருடாந்த்தம் கோடிக்கணக்கான ரூபாய்களை அந்நியச்செலாவணியாகப் பெற்றுத்தரும் தொழிலாளர்களின் நன்மைக்காக உருவாக்கப்படுள்ள கத்தாரின் இலங்கைத் தூதரகம் தொடர்பில் இலங்கை நாட்டின் நல்லாட்சி ஜனாதிபதியும், பிரதமரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென்பது இங்கு தொழில் புரியும் அனைவரதும் மேலானவேண்டுகோளாகும்.


0 Comments