Subscribe Us

சாதாரணதர பரீட்சை மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை.

இந்த வருடம் கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்காக தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் விஷேட தினமாக எதிர் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு பிரிவொன்றை அமைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்.
சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்காக தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை இன்று செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே இதுவரை தேசிய அடையாள அட்டை பெற்று கொள்ளாத மாணவர்கள் இன்றை தினம் செயற்படும் விஷேட சேவை மூலம் பெற்று கொள்ளமுடியும் என தெரிவித்தார்.
சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்கள் வருகை தர அவசியம் இல்லை எனவும் பாடசாலை ஆசியர் அல்லது அதிபர் அல்லது பெற்றோர் ஒருவர் வரலாம் என ஆணையாளர் குறிப்பிட்டார்.
இன்று காலை 8.00 மணி முதல் செயற்படும் இந்த விஷேட சேவையில், அடையாள அட்டைக்கு தேவையான ஆவணங்கள் முறைப்படி முன்வைத்தல் வேண்டும் என தெரிவித்தார்.
சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களுக்காக தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் விஷேட தினமான எதிர் வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் சேவை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments