Subscribe Us

நிலவைத் தொலைத்த வானம்..!


அன்று வெள்ளிக்கிழமை

முருகன் கோவில் வாசலில் நின்றேன்
திருமணமாகாத நான்
முருகனிடம் எதைக்கேட்டு
வணங்குவேன்

வாழ்கையில் எனக்கொரு
அழகான பெண்ணை
துணைவியாகத் தரும்படி
வேண்டிநின்றேன்

கண்மூடி வேண்டுதலைத் தெரிவித்து
கண்களைத் திறந்தேன்

என் கண்களுக்கு எதிரில்
லட்சம் கார்த்திகைத் தீபங்கள்
எரிவதைப்போல் பளிச்சென
அழகாக இருந்த அவளைக் கண்டேன்

பட்டுப்பாவாடை தாவணியில்
நெற்றியில் சந்தண குங்குமத்தோடு
என்னை கவிஞனாக்கி விட்டாள்

பிரம்மன் இத்தனை யுகங்களிலும்
தன் படைப்புத் திறனில்
காட்டியிராத அழகை 
அவளது முகத்தில் தெறிக்கவிட்டிருந்தான்

அவளது ஈர உதடுகளுக்கருகில்
வலது கன்னத்தில் வைத்த மச்சம்
பிரம்மனை மகத்தான கலைஞனாக
போற்றத்தான்; மனம் எண்ணியது

அவள் கண்களால்
தந்த வெளிச்சத்தால்
நிலவைக் கண்ட வானமாக
என் உள்ளமும் பிரகாசிக்கத்
தொடங்கியது

வானத்தையே அளந்து விடுகிற நினைவில்
இறக்கை கட்டிப் பறந்தேன்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
அவளுக்காகவே என்
படையெடுப்பு தொடர்ந்தது

சந்தித்தோம் சிரித்தோம் பேசினோம்

அவளது சின்னச் சின்ன
சிணுங்கல்களை
சித்திரமாக எழுதிக்கொள்ள
இதயம் ஆசைப்பட்டது

புல்தரையில் விழும் éவைப்போல்
என் தோள்மீது சாய்வாள்

அவளது ஏக்க வியர்வையால் 
கசியும் நீhத்துளி என் தோளை நனைத்தது

இதயம் வரைக்கும் இறங்கிய சந்தோசம்
அவள் பிரியப்போகும் அந்தநொடியில்
மனமின்றி கையசைத்தபின்

நிலவை இழந்த வானமாக
பகலையும் இருளாக்கிய நிலையில்
இனிவரும் வெள்ளிக்கிழமைக்காக
இறக்கை இழந்த ஈசலாக தவித்திருப்பேன்

- விக்கி 

Post a Comment

0 Comments