Subscribe Us

header ads

“விபச்சாரத்தில் தள்ளப்பட்டேன்” நாடு திரும்பிய பணிப்பெண்களின் அதிர்ச்சிதரும் தகவல்கள் (காணொளி)

பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து குவைட்டில் உள்ள இலங்கை தூதகரத்தில் தங்கியிருந்த இந்நாட்டு வீட்டுப்பணிப்பெண்கள் 83 பேர் நேற்று இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் தலதா அதுகோரால குவைட்டிற்கு மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை தொடர்ந்து குறித்த வீட்டுப்பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஒரு பெண் தான் கொடுமை தாங்க முடியாமல் தப்பித்த போதிலும் தன்னை பாகிஸ்தானிய கார் சாரதி ஒருவர் விபச்சார விடுதியில் விற்பனை செய்த தாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் மற்றுமொரு பெண் தான் ஒரு முகவரிடமிருந்து மற்றையதொரு முகவரிடத்தில் விற்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் தமக்கு நேர்ந்த அவலங்களைக் கூறி அழுகின்றனர்.

Post a Comment

0 Comments