Subscribe Us

ஒரு நாட்டில் வைத்திய சேவை இல்லையென்றால் அந்த நாடு பாரிய அழிவை நோக்கிச் செல்லும் - சுகாதார பணிப்பாளர்

அபு அலா -

ஒரு புதிய கிராமத்தை உருவாக்கி அங்கு மக்களை குடியமர்த்துவதாக இருந்தால் முதலில் வைத்தியசாலையை நிர்மாணிக்கவேண்டும். அதன் பின்னர் பாடசாலை, தபாற்கந்தோர், பொலிஸ் நிலையம் போன்ற இந்த நான்கும் அக்கிராமத்தில் நிர்மானித்ததன் பின்னர்தான் மக்களை குடியமர்த்தமுடியும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.  

நேற்று (12) அன்னமலை ஆரம்ப பராமரிப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு திறப்பு விழாவின்போது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவொரு நாடாக இருந்தாலும் அந்த நாட்டிலுள்ளவர்கள் ஆரோக்கியமுள்ளவர்களாக வாழவேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் அந்த நாட்டில் கல்வி நடவடிக்கை, தகவல் பரிமாற்றம், மனிதர்களிடையே உண்டாகும் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பன இடம்பெறும். ஆரோக்கியமற்றவர்களாக இருந்தால் இவைகள் ஒன்றுமே இடம்பெறமாட்டாது. அதுமாத்திரமல்ல அங்கு உற்பத்தியும் நடைபெறாது. உற்பத்தி இல்லையென்றால் அந்த நாடு பின்தங்கிச் செல்வதுடன் பாரிய சாவால்களை எதிர்நோக்கிச் செல்லும்.

ஒரு நாட்டுக்கு தேவைப்படுகின்ற மிக முக்கிய தேவைப்பாடுகளில் ஒன்றுதான் வைத்திய சேவையாகும். இச்சேவை இல்லையென்றால் அந்த நாடு பாரிய அழிவுப் பாதையை முன்னொக்கிச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமேமில்லை என்றார்.

Post a Comment

0 Comments