இம்மனிதனை கவிஞன் என்று சொல்வதை விட இவரை நாடோடிக் கவிஞன் என அடையாளப்படுத்துவது இவரது வாழ்வின் தன்மைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். எழுதத் துவங்கிய காலம் தொட்டு இன்று வரை இவரது வாழ்க்கை சம கால அடையாலங்களை கொண்டே கவித்தொகுப்புக்கள் நிறைந்திருக்கிறது.
தன்னுள் பொறியாய்க் கனன்று உதிக்கும் எதையும் கவிதையாய் எழுதி வரும் இவரது இயல்பு கவிதையில் கையாளப்படாத சில உணர்வுகள் கவிதையாய் வெளிவந்திருக்கிறது. இவரது பார்வைக் கோணங்கள் சற்று வித்தியாசமானது. பம்மாத்து இல்லாதது. அதனால்தான் இவரது கவிதைகள் அழுத்தமும் அர்த்தச் செறிவும் மிக்கதாகயிருக்கிறது.
'கவிமூலம்' தொகுப்பு இவரது வாழ்வின், இவரது கவிதையின் மூலத்தை ஓரளவிற்குச் சொல்லும் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் கூடத் தன்னையும், தன் கவிதைகளையும் முன்னிறுத்தாது, அந்த நிகழ்வுகளை ஒரு சக மனிதனின் பார்வையில் சொல்லியிருப்பார்.
கேள்வி : உங்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் தாருங்கள் ?
( பெயர் , ஊர் , படிப்பு , வேலை )
பதில் : சேகு சம்சுதீன் முஹம்மது றபீக் - (எஸ்.எஸ்.எம்.றபீக்.) ஓய்வு பெற்ற ஆசிரியர் - புத்தளம். சிறீ லங்கா.
கேள்வி : கவிதை எழுதும் ஆர்வம் எப்போது தோன்றியது?
பதில் : நான் 8ம் வகுப்பில் கற்கும் காலத்திலிருந்து , என்னுடைய 13ம் வயதிலிருந்தே எழுதும் ஆர்வம் ஆரம்பித்தது . இஸ்லாமியப் பாடல்களைத்தான் முதலில் எழுத ஆரம்பித்தேன்.
கேள்வி : உங்களை கவிதை எழுத தூண்டிய ஒரு காரணி ?
பதில் : பாடசாலைக் காலத்தில் சினிமாப் பாடல் புத்தகங்கள் பார்ப்பேன். அதில் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் மருதகாசி, கொத்தமங்கலம் சுப்பு போன்றோர்களின் பாடல் வரிகளை நன்கு ரசிப்பேன். முக்கியமாக ஈ.எம்.நாகூர் ஹனிபா அவர்கள் பாடுகின்ற பாடல் வரிகள் புலவர் ஆபிதீன் எழுதிய வரிகள் மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்டவர்களின் பாடல் வரிகள் தான் நானும் எழுதிப் பார்க்கலாமே எனத் தூண்டியது. நிறையவே ஆனந்தவிகடன், குமுதம் சஞ்சிகைகளில் வரும் கவிதைகள் வாசிப்பேன்.
கேள்வி : நீங்கள் எழுதிய முதல் கவிதை ஞாபகம் இருக்கிறதா?
பதில் : ஆரம்பத்தில் அதிகமான இஸ்லாமிய கீதங்களையே எழுதினேன். மீலாத் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோருக்காக நிறையவே எழுதிஇருக்கிறேன். அனேகமான பாடல்கள் பரிசில்களைப் பெற்றிருக்கின்றன. கவிதைகள் என்று பிறகுதான் எழுத ஆரம்பித்தேன். ஞாபகத்தில் இருக்கும் முதல் கவிதை:
அம்மா நீ சும்மா…
அன்று நீ மழலை
அம்மா மடிதனில் கிடக்கின்றாய்..
விழிகளைச் சுழற்றி
அங்குமிங்கும் பார்க்கின்றாய்..
இஷ்டம் போல் சிரிக்கின்றாய்..
ஆ..ஊ.. என்கின்றாய்..
ஆரத்தழுவுகின்றாள்..
அள்ளி அணைக்கின்றாள்..
அமுதூட்டுகின்றாள்..
உன் வயிறு நிறைகிறது..
அவள் மனசு குளிர்கிறது..
அவள் முகம் பார்க்கின்றாய்..
ஆயிரம் அர்த்தங்கள் உணர்கின்றாள்..
அம்மா என அழைக்கின்றாய்..
மனம் மகிழ்கின்றாள்…
இன்று அவள் கிழடு,
மூலையில் மடிந்து கிடக்கின்றாள்..
ஏதேதோ கதைக்கின்றாள்..
ஆ..ஊ.. என்கின்றாள்..
எட்டி நிற்கின்றாய்..
என்ன? என அதட்டுகிறாய்..
கடுகடுவென பார்க்கின்றாய்..
அவள் வயிறு எரிகிறது..
நெஞ்சம் வெந்நீராய்க் கொதிக்கிறது..
உன் மனம் அவளைத் திட்டுகிறது..
உன் முகம் பார்க்கின்றாள்..
ஆயிரம் கோணல்கள் காண்கின்றாள்..
அன்று அம்மா என
அழகாய், அன்பாய் அழைத்த உன்னை
மகனே… என அழைத்ததும்
ஏய்! சும்மா கிட என்கின்றாய்..
பாவி மகனே.. உனக்கு
அம்மா என்றால் சும்மாவா ????
கேள்வி : உங்கள் கவிதையை படித்து முதலில் நன்றாக இருக்கின்றது என்று பாராட்டியது யார் ?
பதில் : இந்தக் கவிதையை அப்படியே வைத்திருந்தேன். சுமார் 5 – 6 வருடங்களுக்கு முன்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ‘சந்தக்கவி’ அமீர்அலி அவர்கள் நடாத்தி வந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தக் கவிதையை அவரே வாசித்து அருமையான கவிதை எனப் பாராட்டினார். இஸ்லாமியப் பாடல்களை ‘கலாபூஷணம்’ ஏ.என்.எம்.ஷாஜஹான் சேர், எனது தமிழ் பாட ஆசான்கள் எல்லோரும் பாராட்டி இருக்கிறார்கள்.
கேள்வி : உங்களுக்கு எப்டியான கவிதைகள் எழுத பிடிக்கும்?
பதில் : குறிப்பாக மனித வாழ்வின் விழுமியங்களை எடுத்துக் கூறும்படியான கவிதைகள் எழுதுவது பிடிக்கும். நிறையவே சிறுவர் பாடல்கள் எழுதியுள்ளேன். அவைகளுக்கு இசையமைத்துப் பாடியுமுள்ளேன்.
கேள்வி : எப்படி ஒரு கவிதையை எழுதுகிறீர்கள்?
பதில் : மிக விரிவான விடயங்களை சுருக்கமாக சில சொற்களுக்குள் அடக்கியே எழுதி வருகின்றேன்.
கேள்வி : நீங்கள் எழுதிய கவிதை வரிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதை ஏதாவது (நேயர்களுக்காக)?
பதில் : பொதுவாக நான் எழுதிய எல்லாக் கவிதைகளும் எனக்குப் பிடிக்கும். குறிப்பாக கேட்பதனால் ஓன்றைத் தரலாம்.
தீ – அது
பற்றிக் கொண்டால்..
விறகிலிருந்து “ புகை” வரும்…
தீயது
பற்றிக் கொண்டால்
உறவிலிருந்து “பகை” வரும்..
தீயிற்கும், உறவிற்கும்
ஒரு சொல் - அது
“பந்தம்”.
பந்தம் ஏற்ற – புகை வரும்..
பந்தம் கொடுக்க – பகை வரும்..
தீ (பந்தம்)
எரிதலைப் பெரிதாக்கி
புகை உண்டாக்கும்..
தீயது (பந்தம்)
கதையைப் பெரிதாக்கி
பகை உண்டாக்கும்..
புகையை உண்டாக்கும்
தீ – அது தேவைக்கானது..
பகையை உண்டாக்கும்
தீயது தேவையற்றது..
எரிக்க வேண்டியது…
கேள்வி : நீங்கள் தொடர்ந்து கவிதை எழுத காரணமாக இருப்பது என்ன அல்லது யார் ?
பதில் : அவ்வப்போது எழுதி வந்த எனக்கு 10 வருடங்களுக்கு முன்பு புத்தளத்தில் அந்நூர் வானொலியில் “கவிதைச் சங்கமம்” நிகழ்ச்சி நடாத்தும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்குப் பின்பு எழுதுகின்ற கவிதைகளை உடனுக்குடன் வெளிப்படுத்தக் கூடிய முகநூல் நல்லதொரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது.
கேள்வி : நவீன இலக்கியவாதிகளுடைய படைப்புகள் எந்த அளவில் வரவேற்கப்படுகிறது?
பதில் : பொதுவாக கவிதைகள் எழுதும் ஆர்வம் உள்ளவர்கள், கவிதைகள் வாசிக்க ஆர்வமுள்ளவர்கள் மத்தியில் நவீன இலக்கியவாதிகளின் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
கேள்வி : உங்கள் கவிதைகளுக்கு கிடைத்த மிக பெரிய பாராட்டு அல்லதுபரிசு?
பதில் : தற்போது முகநூலில் எழுதுகின்ற எல்லாக் கவிதைகளுக்கும் நண்பர்களுக்கு மத்தியில் வரவேற்பும் , பாராட்டுக்களும் கிடைக்கின்றன. அண்மையில் “தடாகமட கலை இலக்கிய வட்டத்தினால் (செப்டம்பர் 2015) நடாத்தப்பட்ட சர்வதேச கவிதைப் போட்டியில் எனது கவிதை சிறப்புக் கவிதையாக தெரிவு செய்யப்பட்டு “கவினெழி” பட்டமும், சான்றிதழும் கிடைத்தது.
கேள்வி : எழுதுவதற்கெனக் குறித்த நேரம் வைத்துள்ளீர்களா ? அல்லது தோன்றும் போது குறித்து வைத்துக் கொள்வீர்களா ?
பதில் : குறித்த நேரம் வைத்துக் கொள்வதில்லை. சில கருத்துக்கள் மனதில் தோன்றும் போது எழுதிக் கொள்வது வழக்கம். வேறு இடங்களில் சிந்தனை வரும் போது மிகக் கவனமாக மனதில் பதித்து வைத்து வீடு வந்தவுடன் எழுதிக் கொள்வேன்.
பதில் : சில கவிதைகள் மிகமிக அருமையாக, ஆழமாக, அர்த்தத்துடன் எழுதப்பட்டு வருகின்றன. சில கவிதைகள் ஏதோ புரியாத நிலையிலும் வருகின்றன. அனுபவம், அனுபவமின்மை தாக்கம் புரிகின்றன. சில கவிதைகளை உடன் புரிந்து கொள்ளலாம். சில சற்று உன்னிப்பாக அவதானித்தால் புரிந்து கொள்ளலாம
கேள்வி : இக்கால நவீன கவிதைகளைப்பற்றி உங்கள் கருத்து?
கேள்வி : நவீன கவிதைகள் எல்லாம் புரியாமல் எழுதப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில் : புதியதோ, பழையதோ, நவீனமோ அர்த்தமில்லாமல் எழுதப்படுவதில்லை..
கேள்வி : கவிதைப் பயணத்தில் உங்களைப் பாதித்த கவிஞர்கள் (தமிழில்) யார்? ஆதர் சம் (inspiration) என்று சொல்லுமளவு யாரேனும் ? Any Foreign Poets ?
பதில் : பாதிப்பு என சொல்ல முடியாது. முது பெரும் கவிஞர்களின் சொல்லாட்சி, நுணுக்கங்கள், வரிகளின், சொற்களின் கோர்ப்புகள் எனக்கு பற்பல வழிகாட்டல்களைத் தந்துள்ளன. இப்போது கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் எந்த ஆக்கமும் சிந்திக்க வைக்கும்
கேள்வி : சமகாலக் கவிஞர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள்?
பதில் : குறிப்பிட்டுக் கூறமுடியாது. நல்ல கவிதைகள் எழுதும் எல்லாக் கவிஞர்களையும் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் திறமை மிக்கவர்கள்.
கேள்வி : 'கவிதைக்கான கருவை முன் கூட்டியே திட்டமிடுவதில்லை; கவிதை தானாகவே உருவாகிறது அல்லது நேர்கிறது ' இதற்கு அர்த்தம் என்ன ? கவிதை ஆக்கத்தில் பிர்க்ஞை பூர்வமான உழைப்பு தேவையில்லை என்பதா ?
பதில் : கவிதைக்கான கரு திட்டமிட்டும் தெரிவு செய்யலாம். திடீரென சிந்தனையில் உருவாகலாம். சில தலைப்புகளுக்குள் எழுதலாம். நிலை பெறக் கூடிய கவிதைகள் எழுதுவதென்றால் பிரக்ஞை பூர்வமான உழைப்பு என்னைப் பொருத்தமட்டிலும் அவசியம்.
கேள்வி : குறிப்பாகச் சொல்லுங்கள். கவிதை எழுதுவதற்கு முன்னால் மனதில் விஷயமே இருக்காதா?
பதில் : அப்படிச் சொல்லிவிட முடியாது. கலைஞர்கள், கவிஞர்கள் இவர்கள் மனதில் அது சம்பந்தமான விடயங்கள் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கும். எப்போதும் சில எண்ணங்கள் தோன்றிய வண்ணமே இருக்கும். சில கட்டங்களில் புதிய விடயங்களை எவ்வாறு கையாளலாம் என்று கூட மனதில்,சிந்தனையில் ஓடிக் கொண்டே இருக்கும்.
கேள்வி : உங்களுக்கு சினிமாவில் பாடல் எழுதும் சந்தர்பம் வந்தால் எழுதுவீர்களா?
பதில் : அப்படிக் கிடைப்பது அபூர்வம். என்னைப் பொறுத்த மட்டில் கிடைக்காது. அப்படிக் கிடைக்க வேண்டுமெனில் பல முயற்சிகள் எடுக்க வேண்டும். இருந்தாலும் நான் அதில் ஈடுபடப் போவதில்லை. மார்க்கத்தின் தடைகள் நிறையவே உள்ளன. அதனை மீற முடியாது.
கேள்வி : உங்கள் கவிதை கொண்டு நீங்கள் மாற்ற அல்லது சாதிக்க விரும்புவது ?
பதில் : எனது கவிதைகளை அவதானித்தால் எல்லோருக்குமே புரிந்து கொள்ளமுடியும். அதன் நோக்கங்களை. மனிதன் தன் விழுமியங்களை விட்டும் மாற்றமாக வாழக் கூடாது. நல்ல எண்ணங்களுடன் வாழ வேண்டும் என்பது தான்.
கேள்வி : மரபு, புதுக்கவிதைகளைத் தாண்டி பின் நவீனக் கவிதைகள் இப்பொழுது எழுதப்படுகின்றன. அவை பற்றிய உங்கள் புரிதல் எப்படி?
பதில் : மரபுக் கவிதைகளையோ, புதுக் கவிதைகளையோ தாண்டி கவிதைகள் எழுதவது பிழை எனக் கூற இயலாது. சமூகத்திற்கு சொல்லப்பட வேண்டிய விடயங்களை நவீன முறைப்படி, விளங்கும்படி கவிதை வடிவில், சொல்லுதல் சிறப்பாகும்.
இலக்கண இலக்கிய முறைகளோடு, புலமைகளை உட்புகுத்தி தற்காலத்தில் எழுதினால் கவிதைப் பற்றுள்ள ஒரு சிலரே அதனை வரவேற்பர். ஒரு தரம் வாசித்தல். வாசித்தலோடே புரிந்து கொள்ளல். அது தான் தற்போதைக்குப் பொறுத்தம்.
இலக்கண இலக்கிய முறைகளோடு, புலமைகளை உட்புகுத்தி தற்காலத்தில் எழுதினால் கவிதைப் பற்றுள்ள ஒரு சிலரே அதனை வரவேற்பர். ஒரு தரம் வாசித்தல். வாசித்தலோடே புரிந்து கொள்ளல். அது தான் தற்போதைக்குப் பொறுத்தம்.
கேள்வி : இத்துறையில் சாதிக்கவிரும்பும் இளம் வயதினருக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்?
பதில் : பலதரப்பட்ட முது கவிஞர்களினதும் கவிதைகளைப் படிக்க வேண்டும்.
அதன் அமைப்பு முறைகள், கவிதைகளின் ஓட்டங்கள், புகுத்தியிருக்கும் யுக்திகள் என்பவற்றை நன்கு விளங்கிக் கொண்டால் இத்துறையில் வேகமான முன்னேற்றத்தைக் கண்டு விரைவில் சாதிக்கலாம்.
அதன் அமைப்பு முறைகள், கவிதைகளின் ஓட்டங்கள், புகுத்தியிருக்கும் யுக்திகள் என்பவற்றை நன்கு விளங்கிக் கொண்டால் இத்துறையில் வேகமான முன்னேற்றத்தைக் கண்டு விரைவில் சாதிக்கலாம்.
கேள்வி : உங்கள் அடைவுகளுக்கு குடும்பத்தினர் எவ்வாறு ஊக்கம்அளித்தனர்.
பதில் : கவிதைத் துறை மட்டுமல்ல, சித்திரம்,சிற்பம், சிறுகதை, சிறுவர் பாடல்கள், இஸ்லாமியப் பாடல்கள், சிறுவர்களுக்கான கதைகள் இப்படிப்பட்ட பல்வேறு விடயங்களில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளும் போது எந்த ஒரு ஆட்சேபனைகளும் இருக்கவில்லை. வழி திறந்து கிடந்ததே பெரிய ஊக்கம்.
கேள்வி : இவ் வயதில் சில அடைவுகளை தொட்டுவிட்டீர்கள். இதற்கு திறமை தவிர வேறு எது காரணங்கள் இருக்கின்றனவா?
பதில் : ஆமாம், எனது பெற்றோர்கள், உறவினர்கள் முக்கியமாக எனது ஆசான்கள், பல நல்மனம் கொண்ட நட்புகள்.. இவர்கள் தந்த உற்சாகங்கள் காரணமாக அமைந்தன. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் பெரும் பட்டியலே வந்துவிடும்.
கேள்வி : இலங்கைக் கலைஞர்களை இலங்கை இரசிகர்கள், வாசகர்கள் வரவேற்பளிப்பதில்லை என்ற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?
பதில் : அது அவரவர் இஷ்டம். கவிதைகளைச் சுவைத்து, ரசிக்கும் தன்மை இலங்கையைப் பொறுத்தமட்டிலும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் இருக்கின்றார்கள் என்று குறிப்பிடலாம். கவிதைத் துறைக்கு மவுசு குறைவுதான்.
கேள்வி : உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?
பதில் : கவிதைகளையோ, கதைகளையோ எழுதி எழுதி நாமே வைத்துக் கொள்வதில் பயன் ஓன்றும் கிடைக்கப்போவதில்லை. அவைகளை நூல்வடிவில் வெளியிடுதல் வேண்டும்.
அதற்கான வசதிவாய்ப்புகள், ஒத்துழைப்புகள் முழுமனதுடன் கிடைப்பதில்லை.
என்னுடைய கவிதைகளை நூல்வடிவில் வெளியிட வாய்ப்பு கிடைக்காவிடினும், முக்கியமாக எனது சிறுவர் இலக்கிய ‘பாலர் கதைகள்’ வெளியிடப்படல் வேண்டும்
என்பதே எனது நீண்ட நாள் ஆசை. வெளியிடலாம்.ஆனால் அது ஊர் மட்டத்தில் நின்றுவிடக் கூடாது. தேசிய மட்டத்தில் வெளியிடப்பட வேண்டும் என்பதே எனது முயற்சியாக இருக்கிறது.
முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒரு வெளியீட்டாளர் கிடைத்துவிட்டால் இன்ஷா அல்லாஹ் அது நிறைவேறும் என்று நினைக்கின்றேன்.
நன்றி
அதற்கான வசதிவாய்ப்புகள், ஒத்துழைப்புகள் முழுமனதுடன் கிடைப்பதில்லை.
என்னுடைய கவிதைகளை நூல்வடிவில் வெளியிட வாய்ப்பு கிடைக்காவிடினும், முக்கியமாக எனது சிறுவர் இலக்கிய ‘பாலர் கதைகள்’ வெளியிடப்படல் வேண்டும்
என்பதே எனது நீண்ட நாள் ஆசை. வெளியிடலாம்.ஆனால் அது ஊர் மட்டத்தில் நின்றுவிடக் கூடாது. தேசிய மட்டத்தில் வெளியிடப்பட வேண்டும் என்பதே எனது முயற்சியாக இருக்கிறது.
முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒரு வெளியீட்டாளர் கிடைத்துவிட்டால் இன்ஷா அல்லாஹ் அது நிறைவேறும் என்று நினைக்கின்றேன்.
நன்றி



0 Comments