Subscribe Us

header ads

கிராமங்களுக்கு வவுச்சர் அடிப்படையில் பாடசாலை சீருடை வழங்குவது பொருத்தமாகாது – மஹிந்த

கிராமங்களுக்கு வவுச்சர் அடிப்படையில் பாடசாலை சீருடை வழங்குவது பொருத்தமாகாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கு பதிலாக வவுச்சர் முறையை இந்த அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
இவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கையானது மேலும் இலகுவானதாகவே அமைந்திருக்க வேண்டும்.
நகர்ப்புற பாடசாலைகளுக்கு இந்த முறைமை பொருத்தமானதாக அமையும். எனினும் கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு வவுச்சர் முறைமை வெற்றியளிக்காது.
வவுச்சர் ஊடாக சீருடை பெற்றுக்கொள்ள கிராம பாடசாலை மாணவ மாணவியர் நகரத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்காக அவர்கள் செலவு செய்யவும் நேரிட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கம்பஹாவில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments