'ஐ. ஹெல்மட்' எனும் பெயரிலான கைய டக்க தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தக்கூடிய நவீன தொழில்நுட்பத்திலான தலைக்கவசத்தை வடிவமைத்த இலங்கையரொருவர் 5 இலட்சம் அமெரிக்க டொலரை (இலங்கை மதிப்பில் 7 கோடி ரூபா) வென்றுள்ளார்.
வெரிசோன் எனப்படும் அமெரிக்காவின் தொலைத்தொடர்பு நிறுவனமொன்று ஏற்பாடு செய்திருந்த இப்போட்டிக்கு 1400 க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குகொண்டிருந்ததாக வெளிநாட்டுத் தகவ ல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையைச் சேர்ந்த கனிந்து நாணயக்கார என்பவரே மேற்படி பரிசை வென்றவராவார்.


0 Comments