"10 தலைமுறைக்கும் பணம் சேர்த்து வைக்க வேண்டும், நாம் அனுபவித்த எந்த விதமான கஷ்டத்தையும் நம் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது" என்று தானே அனைத்து பெற்றோர்களும் யோசிப்பார்கள், அதற்காக கடினமாக உழைப்பார்கள்..!
ஆனால், சில பெற்றோர்கள் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் - அதாவது தாங்கள் கடினமாக உழைத்து சேமித்த கோடிக்கணக்கான சொத்துக்களை தத்தம் பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்து கொடுக்காமல், பெரும்பாலான சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி, தங்கள் பிள்ளைகளை மேலும் உழைக்க தூண்டுகிறார்கள்.
அவர்களுள் உலக பணக்காரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ் தொடங்கி சமீபத்தில் தந்தையான மார்க் சுக்கர்பெர்க் வரை டெக் உலகை ஆளும் ஜாம்பவான்கள் பலர் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments