Subscribe Us

பாலித தெவரப்பெருமவிற்கு உள்ளூராட்சி, மாகாண சபைகள் பிரதிமைச்சுப் பதவி?

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும, உள்ளூராட்சி மன்றங்கள் , மாகாண சபை பிரதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பிரபலமான அரசியல்வாதியான இவர், கடந்த பொதுத் தேர்தலின்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளினால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் பிரதியமைச்சராக இருந்த கருணாரத்ன பரணவித்தாரண ஊடத்துறை பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வெற்றிடத்துக்கு பாலித தெவரப்பெரும நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதி இத்தாலிய சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து நாடுதிரும்பியவுடன் இவரது பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Post a Comment

0 Comments