Subscribe Us

header ads

சிரிய அகதிகளை வரவேற்க தயார் நிலையில் கனடா

கனடாவிற்கு வருகிற 10ம் திகதி சிரிய அகதிகளின் முதல் தொகுதியினர் வந்தடைவார்கள் என குடிவரவுத்துறை அமைச்சர் ஜோன் மெக்கலம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு போர், தீவிரவாதம் போன்ற காரணங்களினால் சிரியா, ஆப்கானிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

இவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் புகலிடம் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் சிரியா அகதிகளின் முதல் தொகுதியினர் வருகிற 10ம் திகதி கனடாவிற்கு வருவார்கள் என குடிவரவுத்துறை அமைச்சர் ஜோன் மெக்கல்லம் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கனடாவை வந்தடைந்த பின் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கான தங்குமிட வசதிகள் செய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு  உதவிகளை வழங்க மாகாண அரசுகளும், கனேடிய மக்களும் மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments