Subscribe Us

பலஸ்தீன ஊடகவியலாளருக்கு இடையூறு செய்த இஸ் ரேலிய படையினருக்கு சிறைத் தண்டனை

பலஸ்­தீன ஊட­க­வி­ய­லா­ள­ரான யுவ­தி­யொ­ருவர் நேரடி செய்தி ஒளி­ப­ரப்­பொன்றில் பங்­கு­பற்­றி­ய­போது அவரை கிண்டல் செய்து, இடை­யூறு விளை­வித்த இஸ்­ரே­லிய இரா­ணுவச் சிப்­பாய்கள் மூவர் தண்­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக இஸ்ரேல் அறி­வித்­துள்­ளது. 


சாரா அல் அஸ்ரா எனும் இந்த ஊட­க­வி­ய­லாளர் பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தி­யத்தில் அபுத் எனும் கிரா­மத்­தி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­பட்ட நேரடி செய்தி ஒளி­ப­ரப்பில் தக­வல்­களை தெரி­வித்­துக்­கொண்­டி­ருந்தார்.

அப்­போது அங்கு வந்த இஸ்­ரே­லிய இரா­ணுவ சிப்­பாய்கள் மூவர் சாரா அல் அஸ்­ராவை குழப்பும் வித­மாக கிண்டல் செய்­த­துடன் அவ­ருக்கு முன்­னா­லி­ருந்த வீடியோ கெம­ரா­வையும் மறைத்­தனர்.அவர் பொய் கூறு­கிறார் எனவும் தெரி­வித்­தனர். 


இந்தச் சேட்­டை­களில் கவனம் செலுத்­தாத சாரா அல் அஸ்ரா, தனது பணியை செய்து முடித்தார்.

இக்­காட்­சிகள் தொலைக்­காட்சி யில் ஒளி­ப­ரப்­பா­ன­வுடன் பலர் சாரா அல் அஸ்­ராவை பாராட்­டி­ய ­துடன் இஸ்­ரே­லிய படை­யி­ன­ருக்கு கண்­டனம் தெரி­வித்­தனர். 

இந்­நிலையில், மேற்­படி சிப்­பாய்­க­ளுக்கு 14 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித் துள்ளனர்.

Post a Comment

0 Comments