ஊழல்,நல்லாட்சி,பட்ஜெட்,ஆணைக்கு ழு விசாரணை இப்படி பல செய்திகளை கடந்து தற்போது இலங்கை மக்கள் உள்ளுராட்சி மன்ற தேர்தல் எனும் பேச்சை ஆரம்பித்துள்ளார்கள்.அந்த வகையில் இலங்கையில் எந்த தேர்தல் வந்தாலும் மிக விறுவிறுப்பாக காணப்படும் மாவட்டம் என்றால் திகாமடுள்ள என்றழைக்கப்படும் அம்பாறை மாவட்டமே.
இந்த மாவட்டத்தை பொருத்தவகையில் மு.கா,தமிழ் கூட்டமைப்பு ஆகிய சிறுபான்மை கட்சிகளினதும் யானை, வெற்றிலை எனும் பெரிய கட்சிகளினதும் ஆதிக்கம் இருந்து வருகிறது. ஆனால் கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் மயில் காரர்களும் கால் பதித்திருந்தனர். இப்போது மேலும் சுவாரசியம் அதிகரித்திருக்கின்றது என்றே கருதலாம்.
பெரிய கட்சிகளையும் தாண்டி சிறிய கட்சிகளும் தற்போது அம்பாறையில் தமது ஆதிக்கத்தை செலுத்த முற்படுகின்றனர். அந்தவகையில் உலமா கட்சி,NFGG , தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி, பொறியலாளர் நபீர் தலைமையிலான நபீர் பௌண்டசன்,இப்படி பல சிறிய கட்சியினரும் தமது அரசியல் செல்வாக்கை பலப்படுத்த முன்வரபோவது உறுதியாகியுள்ளது.
உலமா கட்சி பெரும்பாலும் மு.கா வுடன் இணைய வாய்ப்புள்ளது. ஒட்டக சின்னத்தின் சொந்தகாரர்கள் தினம் ஒரு அபிவிருத்தியாக திட்டம் தீட்டி வெளியிட்டு வருவதுடன் அவர்களுக்குள் தளம்பல் நிலை காணப்படுவதை காணக் கூடியதாக உள்ளது.என்றாலும் அந்த கட்சியின் பிரமுகர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்களுக்கும் இருக்கும் நட்புறவு காரணமாக இணைந்து தேர்தலில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
அமைச்சையும் இழந்து அரசியல் அதிகாரத்தையும் இழந்து நிற்கும் அக்கரைப்பற்று மக்கள் மீண்டும் அமைதியாக அரசியலை அவதானித்து வரும் தேசிய காங்கிரஸ் தலைமையை பலப்படுத்தும். இதன் மூலம் குதிரை தமது சொந்த ஊரின் அதிகாரத்தை பலப்படுத்தும் என்பது எதார்த்தமே.
04/05 அரச நிறுவனங்களின் தலைமை பதவியை கொடுத்து அதன் மூலம் தமது கட்சி மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக பல அபிவிருத்தி பணிகளை செய்ய ஆயத்தம் செய்து வரும் மக்கள் காங்கிரசும் இம்முறை பலத்த போட்டி ஒன்றை அம்பாறையில் கொடுக்கும் என்பது உண்மையே.
மக்கள் எங்கள் பக்கமே என பலதேர்தல்களின் நிருபித்த மு.கா இம்முறை பலத்த பலத்துடன் களமிறங்க உள்ளது.ஏனெனில் பிரதியமைச்சர்கள்,மாகாண அமைச்சர்கள் என தமது மரத்தை பலப்படுத்தி தயாராகி வந்தாலும் சில விழுதுகளும் விழ தயாராவது கசப்பான உண்மையே.
மறு முனையில் சாய்ந்தமருதை சேர்ந்த சம்மாந்துறையில் வசிக்கும் பொறியலாளர் நபீர் அவர்களும் தமது நபீர் பௌண்டசன் ஊடாக இந்த தேர்தலில் களமிறங்க தமது ஆயத்தங்களை செய்து வருகிறார். கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல சபைகளிலும் தமது வேட்பாளர்களை நிறுத்த ஆயத்தமாகி வரும் நபீர் அவர்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று மாநகர சபை,அட்டாளைச்சேனை பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை,சம்மாந்துறை பிரதேச சபை,கல்முனை மாநகர சபை ஆகிய சபைகளில் போட்டியிட தகுதியான இளம் தலைமுறையினரையும்,கல்வியலாளர் களையும்,வர்த்தகர்களையும் திரட்டி தற்போது ஆயத்தமாகி வருகிறார்.
இந்த தேர்தல் வட்டார முறையில் நடைபெற உள்ளது இந்த குழுவுக்கு அசூர பலமாக அமையும் என்பது அசைக்க முடியாத உண்மையே.ஆனால் இந்த குழுவினர் தனித்து சுயட்சையாக களமிரங்குவார்களா இல்லை மு.கா./ம.கா/வெற்றிலை/யானை இப்படி யாரோடாவது கூட்டிணைவார்களா என்பது அறிய முடியாதுள்ளது.
எப்படியாக இருந்தாலும் சிறிய கட்சிகளின் ஆதிக்கம் இம்முறை அம்பாறையில் இருக்கும் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. மக்களின் தேவைகளை அறிந்து செயற்படக்கூடிய சிந்திக்க தெரிந்த இளம் சமூகத்தின் கையில் இந்த சபைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் ஆசை. இளம் சமுகத்தை சேர்ந்தவர்களை கட்சிகளின் வேட்பாளர்களாக நிறுத்தினால் நன்றாக இருக்குமல்லவா.
சம்மாந்துறை
சஜா .எ .அனஸ்

0 Comments