பிரான்ஸ் நாட்டில் உள்ள ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரிடம் திருடிவிட்டு அதே நபரை ரயில் விபத்திலிருந்து காப்பாற்றிய திருடன் ஒருவன் ஹிரோவான சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகர ரயில் நிலையம் ஒன்றில் அதிகாலை வேளையில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் அமர்ந்துள்ளார்.
அப்போது, வாலிபரிடம் திருட வந்த ‘பிக் பாக்கெட்’ திருடன் ஒருவன் அந்த வாலிபரின் அருகில் அமர்ந்து அவரிடமிருந்து பண பர்ஸை திருடிக்கொண்டு அங்கிருந்து ஓடிவிடுகிறான்.
சிறிது நேரத்திற்கு பிறகு, அங்கு மற்ற நபர் ஒருவர் வருகிறார். அப்போது, குடிபோதையில் இருந்த அந்த நபர் தள்ளாடியவாறு எழுந்து மயங்கிய நிலையிலேயே முன்னால் உள்ள ரயில் பாதையை நோக்கி நடக்கிறார்.
இதனை மற்ற நபர் உற்றுக்கவணித்துக்கொண்டு இருந்தபோது, அந்த நபர் திடீரென ரயில் பாதையில் விழுந்து விடுகிறார்.
ஆனால், இதனை கவனித்துக்கொண்டு இருந்த மற்ற நபர் எந்த உதவியும் செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிடுகிறார்.
சில வினாடிகளில் அங்கு மின்சார ரயில் ஒன்று வந்து கீழே விழுந்துள்ள வாலிபருக்கு சில அடிகள் தூரத்திலேயே நின்றுள்ளது.
அப்போது, எதிர்திசையில் இருந்து கீழே விழுந்துள்ள நபரிடம் திருடிய திருடன் ஓடி வந்து குடிபோதையில் இருந்த நபரை அவசர அவசரமாக மேலே தூக்கி விடுகிறான்.
ரயிலுக்கும் முன்னால் விழுந்துக்கிடந்த அந்த வாலிபரை யாரும் கவனிக்காமல் விட்டுருந்தால், ரயில் புறப்படும்போது அவர் மீது ஏறி உயிரிழக்க நேர்ந்திருக்கும். ஆனால், திருடனின் முயற்சியால் ஒரு வாலிபரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ரயில் நிலைய பொலிஸ் அதிகாரியான Emmanuelle Oster, ‘குடிபோதையில் கீழே விழுந்த வாலிபரை சாதாரண குடிமகன் காப்பாற்றாமல் சென்றுவிட்டார்.
ஆனால், அவரிடமே திருடிய திருடன் விரைந்து வந்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளான்.
ஒவ்வொரு திருடனுக்குள்ளும் ஒரு நல்ல மனிதன் வாழ்கிறான். ஒவ்வொரு குடிமகனுக்குள்ளும் ஒரு தீய மனிதன் வாழ்கிறான்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.


0 Comments