அமெரிக்காவில் திருட்டுக் குற்றத்துக்காக தேடப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது முதலையொன்றினால் கொல்லப்பட்டுள்ளார்.
மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான மெத்தியூ ரிக்கின்ஸ் எனும் இந்த இளைஞர் திருட்டுக் குற்றத்துக்காக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்.
மற்றொரு சந்தேக நபருடன் இணைந்து திருட்டு நடவடிக்கையொன்றில் ஈடுபடுவதற்காக பார்பூட் பே எனும் நகருக்குச் செல்வதாக தனது காதலியிடம் கூறிவிட்டு சென்றிருந்தார்.
கடந்த 13 ஆம் திகதி முதல் அவரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அவரை பொலிஸார் தொடர்ச்சியாக தேடி வந்த நிலையில் 10 நாட்களின் பின் அவரின் சடலம் ஏரியிலிருந்து சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கையும் காலும் அச்சடலத்தில் இருக்கவில்லை.
இது தொடர்பாக விசாரணைகளை அடுத்து. அந்த இளைஞர் 11 அடி நீளமான முதலையினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக நேற்றுமுன்தினம் செய்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக ஏரியொன்றில் குதித்தபோது அவர் மேற்படி முதலையினால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக கருதப்படுவதாக புளோரிடா மாநில பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 Comments