Subscribe Us

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி வரலாம்: ரணில் (வீடியோ இணைப்பு)

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் போது மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை ஏற்படும். இதன் போது இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு நாம் இப்போதே தயாராக வேண்டும்.

வரவு, செலவுத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் எதிர்க்கட்சிகள் யோசனைகளையும் திருத்தங்களையும் முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றை தினம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 8ஆம் நாள் விவாதத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், அமெரிக்காவைத் தவிர்ந்த உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார நெருக்கடி தலைதூக்கி வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை தலைதூக்கும்.

இதனால் எமது நாட்டிலும் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சர்வதேச நாணய நிதியத்துடன் சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நிதியமைச்சர் தயாராகவுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் குறைபாடுகளை விமர்சிக்கும் எதிர்கட்சிகள் அதிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டும். என்னென்ன திருத்தங்கள் தேவை?, எதிர்க்கட்சிகளின் புதிய யோசனைகள் என்ன? என்பவை முன்வைக்கப்பட வேண்டும். இதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். எதிர்கட்சிகளுடன் இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுப்பதும் முழுப் பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றுவதே எமது திட்டமாகும்.’ என்றும் கூறினார்.

Post a Comment

0 Comments