Subscribe Us

புத்தளம் வைத்தியசாலையில் நேற்றும் பணிப் பகிஷ்கரிப்பு

.வடமேல் மாகாண அமைச்சுக்கு சொந்தமான வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஒன்றிணைந்த வைத்தியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் வைத்தியசாலைகளின் நாளாந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பணிப் பகிஷ்கரிப்பு தொடர்கின்றமையினால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆய்வு கூடம், எக்ஸ்ரே பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் செயலிழந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளருக்கும், வைத்திய அத்தியட்சகருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments