Subscribe Us

header ads

புற்றுநோயை கட்டுப்படுத்தும் புதிய மாத்திரை

மனிதர்களில் உண்டாகும் உயிர்கொல்லி நோயான புற்றுநோயைக் குணப்படுத்துவதில் பச்சைத் தாவரங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

அதாவது மாமிச உணவுகளை உட்கொள்வதை விடுத்து பச்சை காய் கறிகளை உணவாகக் கொள்வதனால் புற்றுநோயை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை தற்போது அமெரிக்க ஆய்வாளர்களும் நிரூபித்துள்ளனர்.
 
இதன்படி அவர்கள் பச்சை தாவரங்களைக் கொண்டு உருவாக்கிய சல்ஃபரோபேன் (Sulforaphane) எனும் கலவைக்கு புற்றுநோயை எதிர்க்கக்கூடிய சக்தி இருப்பதாக நிரூபித்துள்ளார்கள்.
 
சல்ஃபரோபேன் ஆனது ப்ரோக்கோலி தாவரத்தின் முளைகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் 38 பேரை இந்த ஆய்வுக்கு உட்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
 

Post a Comment

0 Comments