Subscribe Us

header ads

கிழக்கு சுற்றுலா தளங்களுக்கான குறிப்பேடு செயலாளரிடம் கையளிப்பு!

(செயிட் ஆஷிப்)

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் பொருட்டு ஆசிய மன்றம் கிழக்கு மாகாண சபைக்கு உதவ முன்வந்துள்ளது.

இதன் பிரகாரம் இம்மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டகளப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சுற்றுலா தளங்களுக்கான வழிகாட்டி குறிப்பேடுகளின் 15,000 பிரதிகள் ஆசிய மன்றத்தினால் அச்சிடபட்டுள்ளன. இதன் ஒரு தொகுதியினை ஆசிய மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன், கிழக்கு மாகாண முதலமைச்சு, மற்றும் உள்ளூராட்சி, சுற்றுலா அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸிடம் கையளித்துள்ளார்.

இது தொடர்பான நிகழ்வு கிழக்கு மாகாண சபை முதலமைச்சு அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், மாகாண அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ரி.தமிழ் செல்வன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments