மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் சிக்கி தொழில்நுட்பவியலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் மும்பை உள்நாட்டு முனையத்தில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்து. 100 பயணிகளுடன் இருந்த அந்த விமானத்தை ஓடுதளத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் தொழில்நுட்பவியலாளர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ரவி சுப்ரமணியம் என்ற தொழில்நுட்பவியலாளர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.என்ஜின் இயக்கப்பட்டதால் உள்ளே இழுக்கப்பட்டத்தில் ரவி சுப்பிரமணியம் உடல் சிதறி பலியானார். . இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலியான ரவி சுப்ரமணியம், ஏர் இந்தியாவில் 1983-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
இந்த சம்பவத்துக்கும், விமான நிலைய பொறியாளர்களுக்கும், விமானிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும் பாதுகாப்பு குறைபாடு காரணம் என்றே கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


0 Comments