29.11.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 04.00 மணியைத் தாண்டிக்கொண்டிருக்க வந்திருந்த ஓரிரண்டு பேர் இன்னும் பலரை எதிர்பார்த்து நின்றிருந்தனர். ஆர்வமுள்ள சிலரின் வருகையை ஏற்று நிகழ்வுகள் தொடங்கப்பட்டன.. ஆம் அன்று தான் புத்தளம் ஸாஹிரா தேசியக் கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் கடல் தேடும் நதி கவிதை நூலின் பிரசவம் நடந்தேறியது.
04.00 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கப்பட இருந்த போதும் 04.30 மணிக்கே நிகழ்வுகளை ஆரம்பிக்க முடிந்ததது அறிவிப்பாளர் ஹிஷாம் ஹூசைன் தன் கனீர் எனும் குரலில் வந்தோரை வரவேற்று சுய பிரார்த்தனை செய்யும் படி வேண்டிக்கொள்ள அவையோரும் எழுந்து மௌனமாக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி உரை நிகழ்த்துவதற்காக சிரமம் பாராது கல்முனைப் பிரததேசத்திலிருந்து வருகை தந்த நூலின் வெளியீட்டாளர் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் புத்தளம் சார்பாக வருக வருகவென வரவேற்கப்பட்டு உரை நிகழ்த்துவதற்காக ஒலிவாங்கி அவரிடம் கையளிக்கப்பட்டது. கலைப்பயணம் தொடர்பாகவும், நூல் ஆசிரியர் தொடர்பாகவும், சர்வதேச மட்ட கவிதைப் போட்டியில் வெற்றியீட்டிய புத்தளத்தின் கலையுள்ளங்களை வாழ்த்தியும் அவரது உரை அமைந்திருந்தது அவையோரைக் கவர்ந்ததது.
அடுத்தபடியாக அழகியதொரு வாழ்த்துக் கவியுடன் வருகை தந்திருந்த புத்தளத்தின் ஹைப்ரிட் கவிதை மன்னன் என ரசிகர்களால் புகழப்படும் சமூக சேவையாளர், கவிஞர் இம்தாத் பஷர் அவர்களுக்கான நேரம் உட்சாகத்துடன் மேடையேறி நூலாசிரியர் பற்றிய வாழ்த்துக் கவியொன்றை அவையோரின் கை தட்டலுடனும் வாழ்த்துக்களுடனும் வாசித்து விடை பெற்றார்.
அவசர அவசரமாக நூல் வெளியீடுகளின் பக்கம் அறிவிப்பாளரின் கவனம் திரும்ப நூல் விமர்சனம் வங்குவதற்காக இந்து மத்தியக் கல்லூரியின் அதிபர் கவிஞர் எம். நாகராஜா அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார், தன் இயல்பான பேச்சாலும் கவிதை நயத்தாலும் அவர் வழங்கிய விமர்சன உரை சிறப்பாக அமைந்ததாக அவையோரால் பேசப்பட்டதுடன் கை தட்டலும் மண்டபத்தில் ஒலித்து ஓய்ந்தன.
அடுத்து நூலின் பிரசவ நேரம் நிகழ்வுகளுக்காக அழைக்கப்பட்ட பிரத அதிதியும், சிறப்பு அதிதிகளில் ஒருவரும் எந்த காரணமும் சொல்லிக்கொள்ளாமல் வருகை தரவில்லை எனும் கவலையுடன் முதல் பிரதியை பெறுவதற்காக நூலாசிரியரின் தந்தை மௌலவி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் அவையோரின் கை தட்டலுடன் மேடையேறி தன் மகனின் கைகளால் நூலை பெற்றுக்கொண்டார், அத்துடன் இன்னும் பல சிறப்பு பிரதிகளும் நூலாசிரியரால் நிகழ்வுகளை சிறப்பிக்க வந்தவர்களுக்கு மேடையில் கௌரவத்துடன் வழங்கிவைக்கப்பட்டது.
“சமூக மேம்பாட்டுக்காக உழைக்கின்ற தங்களை கௌரவப்படுத்தி கடல் தேடும் நதி நூல் வெளியீட்டு விழாவின் போது நூலின் ஆசியர் நுஸ்ரி ரஹ்மதுல்லாஹ்வினால் இக் கௌரவச் சின்னம் வழங்கப்பட்டது” எனும் பதாகை பொருந்திய நினைவுச்சின்னங்களை வழங்கி வைப்பதற்காக தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவி அவர்கள் மேடை அழைக்கப்பட்டு, பிரதி கல்வி பணிப்பாளர் இஸட்.ஏ ஸன்ஹீர், அதிபர் எம். நாகராஜா, வைத்தியர் எஸ்.எச்.அரீம்ஸ், சமூக சேவையாளர் ஜீஸான் (அவர் சார்பாக அவர் மனைவி) ஆகியோர் கௌரவச் சின்னங்களை பெற்றுக்கொன்டனர், நூலாசிரியரினால் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கொரவிக்கப்பட்டது.
தொடராக.. நிகழ்வுகளுக்கு வந்திருந்தோரை மகிழ்விப்பதற்காக சுவையில் ஒரு மாற்றத்திற்காக மேடையேறிய வைத்தியர் எஸ் எச் அரீம்ஸ் அவர்கள் “தரை மேல் பிறக்க வைத்தான்” எனும் பாடலை பாடி அசத்தினார்இ அதைத் தொடர்ந்து தடாகம் நடத்திய சர்வதேச கவிதைப் போடடிகளில் வெற்றியீட்டி புத்தளம் மண்ணிற்கு பெருமை சேர்த்த கவிஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நேரம் கலாபூஷணம் எஸ்.எஸ்.எம். ரபீக் அவர்கள்இ கவிதையாயினி சில்மியா ஷஹீத் அவர்கள், கவிஞர் வஸீம் அக்ரம் (அவர் சார்பாக அவரது நண்பர்), கவிஞர் நுஸ்ரி ரஹ்மதுல்லாஹ் ஆகியோருக்கு கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.
சொல்லி வைத்தாற் போல் நேரமும் அந்தி சாய “பேச மறந்த வார்த்தை” குறுந்திரப்படமும் திரையிடப்பட்டு வந்தோரை மகழ்வித்தது, வாழ்த்துக்களையும் பெற்றுக்கொடுத்தது என்றால் மிகையாகாது, அதனைத் தொடர்ந்து குறுந்திரைப்படக் கலைஞர்கள் மேடையேற்றப்பட்டு கை தட்டலும் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது, நேரக் குறைவு இனியும் நிகழ்வுகள் நீழ முடியாது என்பதால் ஏற்புரை மற்றும் நன்றியுரை நூலாசிரியரினால் வழங்கப்பட்டு பிரார்த்தனைகளுடன் நிகழ்வுகள் இனிதேநிறைவுசெய்யப்பட்டன.





















0 Comments