Subscribe Us

சக மனிதரை முதன்முறையாக நேரில் சந்திப்பது 2040ல் வரலாறு ஆகிவிடும்


காதலுக்காகவோ, நட்புக்காகவோ சக மனிதர்களுடன் முதல் முறையாக நேரடியாக சந்திப்பது வரும் 2040-ம் ஆண்டுக்குள் பழங்கதையாகிவிடுமாம்.

தொழில்நுட்பத்தின் உச்சபட்ச முன்னேற்றத்தால், 2040-ம் ஆண்டு எழுபது சதவிகிதம் பேர் தனக்கு பிடித்த நபரை சந்திக்க ‘விர்ச்சுவல்’ தொழில்நுட்பத்தைத்தான் நாடுவர் என லண்டனின், இம்ப்பீரியல் வர்த்தகக் கல்லூரியின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் நமக்கான துணையைத் தேட எளிதில் உதவும் எனவும் தெரியவந்துள்ளது. அதாவது, நமது மரபணு மூலக்கூறு அமைப்பை வைத்து அதற்கேற்ற துணையைத் தேடிக்கொள்ளலாம்.

இந்த விர்ச்சுவல் தொழில்நுட்பம், நமது ஐம்புலன்களையும் பயன்படுத்த உதவும். ஆகவே, பூமியின் இருவேறு மூலையில் இருப்பவர்களும் இதன் மூலமாகக் கைகோர்த்துக் கொள்ளலாம்.

இந்த ஆராய்ச்சி, நூறு ஆண்டுகளுக்கும் முந்தைய மனிதர்களின் நடவடிக்கை தொடர்பான குறிப்புகள், நேர்காணல்கள் ஆகியவற்றைக்கொண்டு மானுடவியல்(anthropology), சமூகவியல், தொழில்நுட்பம், உயிரியியல் மற்றும் மருத்துவம் போன்றவற்றில் வல்லுனர்களின் கருத்தைக் கொண்டு வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments