Subscribe Us

காந்திக்கு வந்த 8,500 கடிதங்கள் விரைவில் வெளியீடு!

மகாத்மா காந்தி உயிரோடு இருந்த போது அவருக்கு வந்த சுமார் 8,500 கடிதங்கள் தொகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது. மகாத்மா காந்தியின் காலத்தில் அவருக்கு பல முக்கியத் தலைவர்களும், பொதுமக்களும் எழுதிய கடிதங்களை தொகுத்து ஆவணமாக வெளியிட சமர்மதி ஆசிரமம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, மகாத்மா காந்தியால் எழுதப்பட்ட 31 ஆயிரம் கடிதங்கள் தொகுக்கப்பட்டு ஆவணமாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு வந்த கடிதங்கள் இதுவரை தொகுக்கப்படவில்லை.
ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் பலரும், காந்திக்கு வந்த கடிதங்களை மொழிபெயர்த்து, அவற்றை ஆவணஞ்செய்வதன் மூலம், காந்திக்கு இருந்த பொறுப்புகளை அனைவரும் முழுமையாக புரிந்து கொள்ள இயலும் என்றும், இல்லையெனில், அது ஒருவழிப்பாதையாகவே இருக்கும் என்றும் சபர்மதி ஆசிரம பாதுகாப்பு மற்றும் நினைவு அறக்கட்டளையின் இயக்குநர் திரிதிப் ஷருத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments