Subscribe Us

header ads

5 மடங்கு பணத்தை வாரி வழங்கிய ஏ.டி.எம்.: தொழில்நுட்ப கோளாறினால் இன்ப அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்


ராஜஸ்தானில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஏ.டி.எம் இயந்திரத்தில் ஐந்து மடங்கு பணம் வந்ததால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் சிகார் அஜித்கர் என்ற பகுதியில் பிரபல தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று இந்த ஏடிஎம் மையத்துக்கு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார்.

100 ரூபாய் பணத்தை எடுக்க அவர் முயன்றுள்ளார். எனினும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 500 ரூபாய் வந்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போன அவர், இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் ஏராளமானோர் அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க குவித்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த போலீஸார் இந்த காட்சியை கண்டு சந்தேகம் அடைந்தனர்.

இதுகுறித்து விசாரித்த அவர் உண்மை தெரிய வந்ததை அடுத்து, அந்த ஏடிஎம் மையத்தை மூடி, வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.


இயந்திரத்தை சரி செய்ய ஒரு நாள் ஆகும் என்பதால் இரவு முழுவதும் ஏ.டி.எம்.முன்பு காவலர் ஒருவர் நிறுத்தப்பட்டார்.

மறுநாள் தொழில்நுட்ப குழுவினர் வந்து ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர்.

இதற்கிடையில் அந்த ஏடிஎம் மையத்தில் இருந்து கூடுதல் பணம் எடுத்துச் சென்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற வங்கி சார்பில் பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments