2015 ஆம் ஆண்டு உணவுக் குறித்த சர்ச்சைகள் ஏராளமாக இருந்தது. அவற்றில் சில நாம் அன்றாடம் உட்கொண்டு வந்த உணவுகளாக இருந்தால், பலருக்கும் அது ஓர் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதில் நம் அனைவருக்கும் தெரிந்தது மேகி பற்றி தான். மேகியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் லெட் என்னும் பொருள் அதிகமாக இருந்ததால், அது தடைசெய்யப்பட்டது. இதுப்போன்று நிறைய உணவுப் பொருட்கள் குறித்த சர்ச்சைகள் வந்தன. வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்பட்டு வரும் பொருட்கள்!!! இங்கு அப்படி 2015 ஆம் ஆண்டு நம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கி அதிர வைத்த உணவு சர்ச்சைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸ்
மேகி தடை செய்யப்பட்ட பின்னர், இந்தியாவில் யோகாகுரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் உடலுக்கு ஆரோக்கியமான கோதுமை மாவினால் ஆன புதிய பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த நிறுவனம் இதை வெளியிடும் முன் உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணையத்தின் அனுமதியைப் பெறாமவ் வெளியிட்டதோடு, ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் இந்த பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸ் பாக்கெட்டில் வண்டு ஒன்று இருப்பதைக் கண்டுள்ளார்.
ட்ராப்பிக்கானா ஜூஸ்
முகநூலில் ஒருவர் ட்ராப்பிக்கானா ஜூஸில் கருப்பு நிற பூஞ்சை இருப்பது போன்ற ஓர் படத்தை பதிவு செய்திருந்ததோடு, இதனைக் குடித்த அவரது தாய் நோய்வாய்ப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் இதுக்குறித்து ட்ராப்பிக்கானா நிறுவனம் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.
கேஎஃப்சி எலி
கலிபோர்னியாவில் உள்ள கேஎஃப்சி உணவகமானது ப்ரைடு சிக்கனுக்கு பதிலாக ப்ரைடு எலியைக் கொடுத்ததுள்ளதாக டிக்சன் என்பவர் முகநூலில் படத்துடன் ஓர் போஸ்ட் செய்துள்ளார். இதுக்குறித்து கேஎஃப்சி நிறுவனத்திடம் கேட்ட போது, இதனைப் பற்றி அவரை விசாரிக்க அழைத்த போது வர மறுத்ததாகவும், இது வெறும் புரளி என்ற அறிக்கையை வெளியிட்டு சமாளித்துவிட்டது.
கேஎஃப்சி பர்கரில் புழு
கேஎஃப்சி சிக்கனுக்கு புகழ் பெற்றதோ இல்லையோ, சர்ச்சைக்கு பெரும் புகழ்பெற்றது எனலாம். ஏற்கனவே சிக்கனுக்கு பதிலாக எலியை கொடுத்து மாட்டிய நிலையில், மங்களூரில் உள்ள கேஎஃப்சியில், ஓர் தம்பதி பர்கர் ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அப்போது அந்த பர்கரில் புழு இருந்ததைக் கண்டு, அங்குள்ள மேனேஜரிடம் புகாரளித்த போது, அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததோடு, அந்த பர்கரை போட்டோ எடுக்கவும் அனுமதிக்கவில்லையாம்.

0 Comments