Subscribe Us

டி20 போட்டிகளில் 600 சிக்சர்கள் விளாசி கெய்ல் உலக சாதனை


டி20 கிரிக்கெட் போட்டி என்றாலே நமக்கு நினைவில் வரும் முதல் வீரர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல்தான். இவர் களத்தில் நீண்ட நேரம் நின்றுவிட்டால் மைதானத்தில் சிக்சர்களாக அடித்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கை நிகழ்த்துவார்.

ஐந்து பந்துகள் சந்தித்தாலும் அதில் ஒரு சிக்ஸ் அடிப்பார். அப்படிப்பட்ட கிறிஸ் கெய்ல் சாதனை கிரீடத்தில் தற்போது மேலும் ஒரு சாதனை சேர்ந்துள்ளது. அவர் டி20 போட்டிகளில் 600 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற வங்காளசேதம் பிரீமியர் லீக் பேட்டியில் பரிசால் புல்ஸ் அணிக்காக விளையாடிய கெய்ல், 47 பந்தில் 92 ரன்கள் விளாசினர். இதில் 9 சிக்சர்கள் அடங்கும். அப்போது அவர் 598 சிக்சர்கள் அடித்திருந்தார். இன்று பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக களமிறங்கிய கெய்ல் 16 பந்தில் இரண்டு சிக்சர்களுடன் 23 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு சிக்சர்களுடன் அவர் டி20 லீக் போட்டிகளில் 600 சிக்சர்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இவருக்கு அடுத்தப்படியாக பொல்லார்டு 388 சிக்சர்களும், நியூசிலாந்து வீரர் பிராண்டன் மெக்கல்லம் 290 சிக்சர்களும் அடித்துள்ளனர். இந்திய வீரர்களில் ரெய்னா அதிகபட்சமாக 225 சிக்சர்களும், ரோகித் சர்மா 219 சிக்சர்களும் விளாசியுள்ளனர்.

Post a Comment

0 Comments