இந்திய பெண்மணியொருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவுதி அரேபியா தீர்மானித்தவுடன் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி சவுதி அரசாங்கத்துக்கு தெளிவாக எச்சரிக்கை விடுத்தார். அங்கு ஒரு பெண்ணைக் கொலை செய்தால், இந்த நாட்டிலுள்ள 100 பேரை இந்தியாவில் கொலை செய்வதாக கூறியவுடன் அந்தப் பெண் விடுதலை செய்யப்பட்டார். ஏன் இலங்கைப் பெண்மணி குறித்து இதுபோன்றதொரு தீர்மானத்துக்கு வர முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார்,
வெளிநாட்டிலுள்ள மரண தண்டனையை விமர்சிக்கும் சிலர், இந்த நாட்டில் தூக்குத் தண்டனையை கொண்டு வர வேண்டும் எனக் கூறுவது வேடிக்கையானது எனக் கூறினார்


0 Comments