Subscribe Us

header ads

கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் சின்னத்தின் அமைப்பைத் திட்டமிட்டு வரைந்தவர் ஆசான் S.S.M Rafeek



கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் இன்றைய உயர் நிலைக்கு அன்று பெரும் பங்களிப்புச் செய்தவர்களில் எமது புத்தளம் மண்ணின் மைந்தர்களுக்கு தனியிடம் உண்டு எனின் மிகயன்று. அதிபர்களாகவும் ஆசான்களாகவும் அதன் உன்னத வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றிய பெருமை எமக்குண்டு. ‘பாலப் பண்டிதர்’ ஏ.எம்.ஐ இப்றாகிம் நெய்னா மரிக்கார் (1964.01.01 – 28.02.1973) (‘பூம்பொழில்’ நிஹ்ரீர் அவர்களின் அருமைத் தந்தை) மற்றும் ஆசான் ஏ.என்.எம். ஹலில் (22.3.1973 – 31.01.1974) Aஆகியோர் அதிபர்களாக அரும்பணியாற்றியுள்ளனர். ஆசிரியர்களாகக் கடமையாற்றிய மண்ணின் மைந்தர்களின் பட்டியலும் நீண்டது........’ 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் சின்னத்தின் அமைப்பைத் திட்டமிட்டு வரைந்தவர் மண்ணின் மைந்தர் ‘கலாபூஷணம்’ ஜனாப் எஸ்.எஸ்.எம். றபீக் ஆசிரியர் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நுண்கலை ஆற்றலை இயல்பூக்கமாக பெற்ற அவர் திட்டமிட்டு அதனை வளப்படுத்தியவர். பாராட்டுகளையும் விருதுகளையும் தனதாக்கிக் கொண்டவர். ஓவியத்தில் தனித்திரமையை வெளிப்படுத்தும் அன்னார் சிறுவர் பாடல்கள் இயற்றுவதிலும் பாடல்கள் பாடுவதிலும் தேர்ச்சி மிக்கவர் 

என் மனதில் நீங்கா இடம்பெற்றுவிட்ட ஆங்கில ஆசான் ஏ.என்.எம். ஹலீல் அவர்கள் கடமை நிறைவேற்று அதிபராக இருந்த காலப்பகுதியிலேயே பாடசாலை சின்னம் உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார் என்பது அதி விசேடமாக இவண் பதிவு செய்வது அவசியமாகும். The Story of Al – Aqsa Crest” தலைப்பிட்ட கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார் 

‘During my teaching career I had an opportunity being the Duty performing Principal this great institution from 1973 to the end of January 1974…. as I set about discharging my duties ,I strongly felt that AL – AQSA needed a new crest in the appropriateness of our aspirations, the cultural background and other contributory factors. Fortunately for us the famous Arabic calligraphist of puttalam Mr. S.S.M. Rafeek was one of our staff then and he designed the crest that of course, was a true reflection of our sentiments. In the crest we inscribed the words “FAITH, KNOWLEDGE, VIRTUE “as our motto. The crest was enthusiastically approved by the P.T.A AND thereafter an every assembly I explained to my student what those three divine and dynamic words stood for …

” (வெள்ளிவிழா மலர் )

தொகுப்பு : MHD.JEEZAN AZEER

Post a Comment

0 Comments