யானை தாக்குதலுக்குள்ளான இடத்தை பார்வையிட்ட மணற்குளம் அபிவிருத்தி அமைப்பு.
முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பூநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மணற்குளம் கிராமத்தில் எல்லை பகுதியில் வசித்து வரும் ஜெமில் என்பவரின் விட்டு தோட்டத்தையும்,தென்னை கன்றுகளையும் நேற்று இரவு மதம் பிடித்த யானைகள் சேதப்படுத்திய காட்சிகளை நிங்கள் பார்க்கலாம்.
இதனை கேள்விபட்ட மணற்குளம் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் மற்றும் இணை செயலாளர் பார்வையிட்டனர்.
இந்த விடயம் தொடர்பாக விட்டு உரிமையாளர்களை தொடர்பு கொண்டு விசாரித்து உண்மை நிலைகளையும் அறிந்து கொண்டனர்.
எதிர்காலத்தில் இப்படியான அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் இருக்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என இவ் அமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுக்கின்றார்.
-SHM.WAJITH-
0 Comments