Subscribe Us

ஒன்பது மாதங்களில் 2 ஆயிரம் இணைய முறைப்பாடுகள்

கடந்த 9 மாதங்கள் இணையத்தளம் தொடர்பிலான 2 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளித்து மன்றம் தெரிவித்துள்ளது. 

அதன் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுத்தா இதனைத் தெரிவித்துள்ளார். 

அவற்றில் போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளே அதிகம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில் புகைப்படங்களை பேஸ்புக்கில் தரவேற்றும் போது, தெரிந்த நண்பர்களுடன் மாத்திரம் பகிர்ந்து கொள்ளுமாறும், இதுவே பாதுகாப்பான நடைமுறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments