Subscribe Us

header ads

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடத்திய Digitel சித்திரப் போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மூன்று மாணவர்கள் வெற்றி

தெற்காசிய தகவல் தொழில் நுட்ப மற்றும் மருத்துவ பல்கலைக் கழகம் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடத்திய Digitel சித்திரப் போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி உயர் தர பிரிவு மாணவர்களான எப்.எம்.மஹ்ரான் (3rd Place), எம்.கே.ஹம்தான் (5th place) ஆர்.எம்.சிப்ரி (6th place) பெற்றுள்ளனர்.

பல நூறு மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் சாஹிரா மாணவர்கள் மூவர் முதல் பத்து பேரில் இடம் பிடித்தமை சிறப்பம்சமாகும். இவர்கள் கொழும்பில் இன்று (31.10.2015) இடம் பெற்ற பரிசளிப்பில் கலந்து கொண்டனர். இவர்களுடன் பிரதி அதிபர் எம்.எஸ்.எஸ்.ரஜிய்யா, ஆசிரியர்களான எச்.எச்.எம்.சஜூ (Art) எம்.என்.எப். புஷ்ரா (IT) ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.


-Mohamed Muhsi-

Post a Comment

0 Comments