Subscribe Us

header ads

வீதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள்: காரணம் வெளியாகியது (காணொளி)

எல்பிட்டிய - ஹூரகஹ - ரண்தொடுவில பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று காலை 9.15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளிலில் பயணித்த இருவர் மீது , வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 20 மற்றும் 24 வயதான இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

முன்னர் ஏற்பட்ட மோதல் ஒன்றே கொலைகளுக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கலேபொத்தவல மைதானத்தில் விளையாடும்போது மோதலொன்று இடம்பெற்றதாகவும் , இதனையடுத்தும் மோதலொன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பொலிஸாரின் கவனயீனமே கொலைகளுக்கான காரணமென அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments