Subscribe Us

header ads

ஸ்மார்ட் பல்ப் வந்தாச்சு தெரியுமில்லே!


தற்போது உலகமெங்கும் வியாபித்து வரும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் பட்டியலில் மின் விளக்கும் சேர்ந் திருக்கின்றது. வித்தியாசமாக ‘ஸ்டார்ட்அப்’ என்ற நிறுவனம் இந்தியாவில் ‘ஸ்மார்ட் பல்பு’களை அறிமுகம் செய்திருக் கின்றது.இந்த வகை பல்புகளை கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களின் மூலமாக கட்டுப்படுத்தலாம். பல்புகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அதனை கட்டுப்படுத்தும் மென்பொருட்களை வெளியிடுகின்றன. இதனால் பல்புகளை வீட்டில் இருந்தபடியும், வெளியில் இருந்தபடியும் பயன்படுத்த முடியும். மேலும் பல்புகளில் வெளியாகும் ஒளியின் அளவுகளை இந்த பல்புகளில் கட்டுப்படுத்தலாம். அதாவது பகல் நேரங்களில் விளக்கு களை இயக்க நேர்ந்தால் ஒளியின் அளவினை பாதியாக குறைத்து கொள்ளலாம். மீண்டும் இரவு நேரங்களில் அதன் பிரகாசத்தை முழு அளவாக கூட்டிக்கொள்ளலாம். மேலும் வீட்டில் இல்லாத சமயங்களிலும் வீட்டில் இருக்கும் பல்புகளை இயக்கலாம்



சமீப காலமாக நவீனமயமாகி விட்ட எல்.ஈ.டி பல்புகளை பெரும்பாலான மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மேலும் எல்.ஈ.டி.பல்புகள் பல வகையான நிறங்களிலும், டிசைன்களிலும், ஒளிவிடும் அளவுகளிலும் கிடைக் கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் அறைகளுக்கு ஏற்றார் போன்ற பல்புகளை வாங்கி பொருத்தி கொள்ளலாம். இதில் வெளிவரும் 60 வாட் திறன் கொண்ட பல்பினை பயன்படுத்துவதே வீட்டிற்கு அதிகபடியான பிரகாசத்தை வழங்கிவிடுகிறது.


மேலும் இதனை நாள் ஒன்றிற்கு இரவு நேரங்களில் 3 மணி நேரங்களுக்கு பயன்படுத்தினால் குறைந்தது 22 வருடங்கள் வரை நீடித்து ஒளிதரும் ஆற்றல் கொண்ட பல்புகளும் உருவாக்கப் படுகின்றன. இதனை பயன் படுத்துவதினால் சி.எப்.எல். மற்றும் ‘இன்கேன்டிசண்ட்’ விளக்குகளை விட இயல்பான வெளிச்சத்தினை பெற முடிகிறது. சிலவிளக்குகளில் வெளிவரும் பிரகாசம் சூரிய வெளிச்சத்தை விட சற்று மாறுபட்டதாக இருக்கும். ஆனால் எல்.ஈ.டி பல்புகளில் இம்மாதிரியான குறைபாடுகள் ஏற்படுவதில்லை.

எல்.ஈ.டி.பல்புகளை அதிகளவில் ஒளிரவிடுவதினால் பல்புகள் சூடாவதில்லை. இவற்றை பயன்படுத்துவதினால் வெப்பம் அடைந்து வெப்ப காற்றினை வெளியிடுவதில்லை. இவை ஒளிரும் போது வெப்பமடையாமல் இருக்கும் வகையில் பல்புகளின் தொழில்நுட்பத்தினை வடிவமைத் துள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் தனியாக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தி உள்ளனர்.

இந்நிலையில்தான் மொபைல் போன் ஆப்ஸ் மூலம் இயக்கக் கூடிய ஸ்மார்ட் பல்பான .ஓ.டி.ஏ லைட். ‘க்யூப் 26′ எனும் இந்திய நிறுவனம் இந்த மின் விளக்கினை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பல்பு சுமார் 15,000 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என்பதோடு, இந்த விளக்கு 16 மில்லியன் நிறங்களில் ஒளிரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மொபைல் போனில் அழைப்பு அல்லது குறுந்தகவல் ஏதும் வந்தால் வித்தியாசமான நிறம் மூலம் எச்சரிக்கை செய்யும்.தற்போது500 லூமென்ஸ் ப்ரைட்னஸ் வழங்கும் 7 வாட்ஸ் பல்பு இந்தியாவில் ரூ.1,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments