சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் கலந்து கொள்வதற்காக மக்கா பயணம் . அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற மன்னர் அப்துல் அஸீஸ் அல் குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்ற களுத்துறை ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரி மாணவன் அல் ஹாபிழ் முஹம்மது நவாஸ் முஹம்மது நஸ்லின் சர்வதேசரீதியாக புனித மக்காவில் எதிர் வரும் 07/11/2015ஆம் திகதி நடைபெறவுள்ள அல் குர்ஆன் மனனப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இன்ஷா அல்லாஹ் 05/11/2015 இன்று பயணமாகின்றார்.
எனவே அப்போட்டியில் கலந்து வெற்றி பெறுவதற்கு வல்ல அல்லாஹ்விடம் அனைவரும் பிரார்த்திப்போமாக!

0 Comments