இலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு- 20 போட்டி 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவிருந்த போட்டியே 11 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபிததேரரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், அன்றைய தினத்தை தேசிய துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனையடுத்து கிரிக்கெட் போட்டி நடைபெறும் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments