வில்பத்து தேசிய வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மிருகங்களை வேட்டையாடிய மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வண்ணாத்துவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதி செல்வி பாரதி விஜேரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே மேற்கண்ட உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.
6ம் கட்டை பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் பணியிலிருந்த பொலிஸார் அவ்வழியாக வந்த முச்சக்கர வண்டியொன்றை நிறுத்திச் சோதனைக்கு உட்படுத்திய போது அதனுள்ளிருந்து துப்பாக்கி ஒன்று, 12 தோட்டாக்கள், 8 ஒளி விளக்குகள் உட்பட வேட்டையாடப்பட்ட மிருகங்களை இறைச்சி மற்றும் பால் ஆமை என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுள் முன்னாள் பிரதேச அரசியல்வாதி ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments