Subscribe Us

வாஸ் குணவர்தன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனையவர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகளுக்கான விசேட சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து வாஸ் குணவர்தனவும் இதில் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாஸ் குணவர்தனவிற்கு இருதய நோய் ஏற்பட்டுள்ளதாகவும் மரண தண்டனை விதிக்கப்பட முன்னரும் அவர் இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளார்.

தற்போது மீளவும் வாஸ் குணவர்தன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாஸ் குணவர்தன சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைப் பிரிவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments