Subscribe Us

சிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்: 18 பேர் துடிதுடித்து பலி -பலர் படுகாயம்...


சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரினால் இதுவரை சுமார் 2,50,000 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். உலகில் உள்ள 4 அகதிகளில் ஒருவர் சிரியாவைச் சேர்ந்தவரே.

சிரியாவில் பெரும்பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதனால் சிரியா அதிபருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் ரஷ்ய படைகள் விமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமேற்கு சிரியாவில் உள்ள அரிஹாவின் முக்கிய நகரத்தில் உள்ள மார்க்கெட்டில் நேற்று ரஷ்ய அரசு விமான தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவிப் பொதுமக்கள் 18 பேர் பலியாகியிருப்பதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

Post a Comment

0 Comments