சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் நேற்று கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வு ஜம்மியத்துல் உலமா சபை கட்டிடத்தில் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட இஸ்லாமிய நிறுவனத்தின் பொறுப்பதிகாரி பர்ஸான் மௌலவி, சம்மாந்துறை மஸ்லிஸ் சூறா தலைவர் ஐ.எல்.வஹாப், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையிள் உப தலைவர் கே.எம்.முஸ்தபா, ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி எஸ்.இஸ்மாலெப்வை, விழாக் குழு தலைவர் மௌலவி ஐ.எல்.கபூர், ஏ.எல்.சறூக் மௌலவி, மற்றும் ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் மஸ்லிஸ் சூறா ஆகியவற்றின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்
(எம்.எம்.ஜபீர்)


0 Comments