இலங்கை முஸ்லிம்களின் வரலாறு முக்கிய கவன ஈர்ப்பைப் பெற்றுள்ள காலத்தில் பிரதேச ரீதியாக வரலாற்றை ஆராயும் போக்கும் அதிகரித்து வருவதை காணலாம். இந்த வகையில் புத்தளம் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில் 1992 இல் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மர்ஹூம் ஏ.என்.எம்.சாஜஹான் அவர்களின் புத்தளம் வரலாறும் மரபுகளும்", 1999 இல் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் "புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் வரலாறும் மரபுகளும்", 2009 இல் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் "புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்" எனும் முக்கிய நூல்கள் வெளியாகின.
பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களின் "புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும்" எனும் நூலை வெளிக் கொணர நாம் சமய ,கல்வி, சமூக ஆர்வலர்கள் சிலர் அனஸ் அவர்களுடன் இணைந்து பங்காற்றி, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் வெளியீடும் இடம் பெற்றது. வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப், கலாநிதி சுக்ரி, உஸ்தாத் அகார் முஹம்மத் ஆகியோர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதற்காக நிதிப் பங்களிப்பை செய்த தமது பெயர்கள் வெளியிடப்படுவதை கூட பெரிதும் எதிர்ப்பார்க்காத சகோதரர்களை இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறோம். நூலை கொள்வனவு செய்த சகோதர சகோதரிகள் பாராட்டபப்ட வேண்டியவர்கள்.
குறிப்பாக இந்த நூல் அச்சடிக்கப்பட சமூக ஆர்வலர் எஸ்.எம்.எம்.இல்ஹாம் ஐம்பதாயிரம் ரூபா (50000/) பங்களிப்பு செய்தார். இன்னுமொரு பெயர் குறிப்பிட விரும்பாத முக்கியஸ்தர் ஐம்பதாயிரம் ரூபா (50000/) பங்களிப்பு செய்தார். அவர் பின்னர் இந்த நூலின் பிரதிகளை ஒரு இலட்சம் ரூபாவுக்கு (100.0000/ ) கொள்வனவு செய்து,அவற்றை மத்ரசாக்கள், பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்யும் படியும் எம்மிடமே வேண்டிக் கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிலையில் புத்தளம் முஸ்லிம்களின் இருப்பு, வாழ்வியல் அம்சங்கள் முதலானவற்றை சுமந்துள்ள இந்த நூலை ஆங்கிலத்தில் வெளியிட வேண்டிய தேவை மிகவும் உணரப்படுகின்றது. இதில் மேலும் சில சமகால விடயங்கள் உள்ளடக்கப்படவும் வேண்டியுள்ளது.
எனவே இந்த முயற்சிக்கு நாம் முடிந்தவரை பங்களிப்பு செய்ய வேண்டியதும் பொறுப்பல்லவா. எனவே இது தொடர்பில் உங்களின் நேசக் கரத்தை நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
நன்றி
S.R.M.M.Muhusi
B.A (Hons),Dip in Edu,PGDTMH (UK)
0094714461303
0 Comments