வல்லுறவுக்கு உட்படுத்திய நபரை கொலை செய்து அவரது அந்தரங்க உறுப்பை சமைத்து உண்ட புதுமணத்தம்பதிகள் கைது செய்யபட்டுள்ளனர்.
இது குறித்து தெரியவருவது,
இந்தோனேஷியாவின் லம்புங் மாகாணத்தை துலாங் பவாங் பகுதியை சேர்ந்தவர் ரூடி எபண்டி( வயது 30) இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் சுமத்ராவில் வைத்து திருமணம் நடந்துள்ளது. மனைவியின் பெயர் நூரியா.
திருமணம் நடந்த இரவன்று , அவரது மனைவி தன்னை வேன் சாரதி ஒருவர்
வல்லுறவுக்குட்படுத்தியமையை தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து மனைவியின் மூலம் குறித்த சாரதியை அழைத்து வர செய்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர் சாரதியின் உறுப்பை வெட்டி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று மனைவியை அதை சமைத்து தருமாறு கூறி இருவரும் சாப்பிட்டு உள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் இந்த கொலை தொடர்பாக புதுமணத்தம்பதிகளை கைது செய்து உள்ளனர். பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments