
WT 1190 எப் என பெயரிடப்பட்டிருந்த குறித்த விண் பொருள் இன்று முற்பகல் 11.49 மணியளவில் , தென் கடற்பிராந்தியத்திலிருந்து 62 கடல் மைல் தொலைவில் விழுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தகைய எதுவும் குறித்த கடற்பகுதியில் விழவில்லையென சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனினும் மர்மப் பொருள் தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் , வெவ்வேறு மூலங்களை மேற்கோள்காட்டி வெளியாகியிருந்தன.
இதற்காக தெற்கு கடற்கரைப்பகுதியில் அவதானிப்புப் பணிகளிலும் பலர் இறங்கியிருந்தனர்.
அதன்படி குறித்த மர்மப் பொருளானது இன்று மாலை 6.30 மணியளவில் புவியில் தாக்கத்தை ஏற்படுத்துமென ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆதர்சி கிளார்க் நிலையத்தை மேற்கோள்காட்டியே இச்செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பொருள் புவியின் மேற்பரப்பை அண்மித்ததும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமன்றி சமூகவலைதளங்களில் , குறிப்பாக டுவிட்டர் ஊடாகவும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இது தொடர்பில் சில முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
WT1190F என்ற குறித்த மர்ம விண்பொருளானது என்னவென்று விஞ்ஞானிகள் உறுதியாக கூறாதபோதிலும் , அது ரொக்கெட் ஒன்றின் பகுதியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இது கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் வேகம் மட்டும் அடர்த்தி ஆகியவற்றின் அடிப்படையில் அது விண்கல்லாக இருக்க வாய்ப்பில்லையெனவும் மாறாக மனிதனால் தயாரிக்கப்பட்ட உபகரணமென்றின் பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது புவியின் மேற்பரப்பை அண்மித்த தும் எரிந்து சாம்பலாகக் கூடிய சாத்தியமே அதிகமென ஆராய்ச்சியாளர்கள் முன்னரே தெரிவித்திருந்தனர்.
கடந்த சில நாட்களாகவே குறித்த விண் பொருள் தொடர்பாக தகவல்கள் வெளியாகிய வண்ணமிருந்தன.
ஜேர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் இது தொடர்பான ஆராய்ச்சியில் மும்முரமாக இறங்கியிருந்தனர்.
ஸ்டீபன் லோல் மற்றும் பெபியன் சேண்டர் போன்ற இத்துறையில் அனுபவம்மிக்க ஆராய்ச்சியாளர்கள் இதில் பங்குபற்றியிருந்தனர்.
வானில் விமானத்தில் இருந்துகொண்டே குறித்த விண் பொருள் வீழ்வதை அவர்கள் ஆராய்வர் என தெரிவிக்கப்பட்ட து.
இதேவேளை அரிசோனா பல்கலைக்கழகத்திலிருந்தும் குறித்த விண்பொருள் அவதானிக்கப்பட்டிருந்தது.
இதன்போது இது இரண்டு மீற்றர் நீளமாக இருக்குமெனவும் , இதன் கதி செக்கனுக்கு 11 கிலோ மீற்றர்களாக இருக்குமெனவும் கணிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதிக வேகத்தில் இது பூமியின் எல்லைக்குள் நுழைவதால் மேற்பரப்பிலேயே அழிவடையுமெனவும் எதிர்வுகூறப்பட்டிருந்தது.
இதேவேளை இவ் அவதானிப்புப் பணிக்கு ஐக்கிய அரபு இராச்சியம் அனுசரனை வழங்கியிருந்தது.
இதன் அவதானிப்பு பணியில் ஈடுபட்டிருந்தோர்.
* Peter Jenniskens, Mike Koop, Jim Albers (SETI Institute): High
*dynamic range imaging, exact timing, flight path optimisation
*Ron Dantowitz (Clay Center Observatory, Dexter Southfield), Forrest
*Gasdia (Embry-Riddle Aeronautical University): High resolution
*imaging, spectral imaging
*Stefan Löhle, Fabian Zander (HEFDiG): high-dispersion visible
*spectroscopy
*Mohammad Shawkat Odeh (IAC): Imaging cameras
*United Arab Emirates Space Agency: Imaging cameras
எது நடந்ததோ இல்லையோ, விண்பொருளை காண காத்திருந்தவர்கள் இலவு காத்த கிளி போல ஏமாற்றமடைந்தது தான் உண்மை….
0 Comments