Subscribe Us

header ads

முஸ்லிம் விவகார, தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளராக அஸ்வான் மௌலானா நியமனம்!

முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசார இணைப்புச் செயலாளர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கான நியமனக் கடிதம் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சு அலுவலகத்தில் வைத்து முஸ்லிம் சமய, கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அலஹாஜ் எம்.எச்.ஏ ஹலீம் அவர்களினால் கையளிக்கப்பட்டது.

கடந்த 180 நாள் அரசாங்கத்தில் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் இணைப்பாளராக பதவி வகித்து வந்த இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளராகவும் மேடைப் பேச்சாளராக கலைஞராகவும் திகழ்வதுடன் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார்.

கலை, இலக்கிய மற்றும் சமூக சேவைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளரும் செனட்டர் எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானாவின் சகோதரருமான செயிட் சக்காப் இசட்.மௌலானாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

M.I Samsudeen

Post a Comment

0 Comments