பாலஸ்தீனத்தின் ‘இக்பால் அல் அஸ்ஸாத்’ எனும் இப்பெண்மணி, 2013 ஆம் ஆண்டு உலக தரப்படுத்தலின்படி மிக இளம் வைத்தியர்கள் பட்டியலில் 4 ஆம் இடத்தில் உள்ளார்.
14 வயதில் மருத்துவ படிப்பை தொடங்கி 20 வயதில் டாக்டராகி இவர் சாதனை படைத்துள்ளார்..!
முதல் இடத்தில் 17 வயதில் ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் டாக்டராகிய செரேன்னாஹ் ஹார்டிங் எனும் பெண் வைத்தியர் இடம்பிடித்துள்ளார்.
தனது எதிர்கால கனவு குறித்து தெரிவித்த இக்பால் அல் அஸ்ஸாத், தான் “பாலஸ்தீன மக்களுக்கு இலவசமாக மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை வழங்குவதே தனது இலட்சியம்” என்கிறார்.
மேலும், சிறு வயதில் காஸாவில் முகாம்களில் உள்ள உறவினர்களை பார்க்க செல்கின்றபோது தான் எதிர்கொண்ட இன்னல்களையும் அதன்போது அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
-Mohamed Hasil
0 Comments