Subscribe Us

கொள்ளுபிட்டிய இரவு விடுதியில் மோசமாக நடந்துகொண்ட பொலிஸ் உயர் அதிகாரி

கொள்ளுபிட்டியவில் உள்ள இரவுவிடுதியொன்றில் மோசமாக நடந்துகொண்டதாக கூறப்படும் பொலிஸ் உயர் அதிகாரி தொடர்பில் விசாரணை நடத்தும்படி ,தேசிய பொலிஸ் ஆணைக்குழு , பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்பு சபை மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடையே அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இச்சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி வட மேல் மாகாணத்தில் சேவையில் இருப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி பொலிஸ் மா அதிபரான அவர் நன்கு குடித்து விட்டு மோசமான முறையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments