Subscribe Us

header ads

கம்ப்யூட்டர் மவுஸில் குவிந்து கிடக்கும் பாக்டீரியா


இன்றைக்கு கணினியை பயன்படுத்துபவர் அதிகரித்து விட்டனர். கணினியின் மிக முக்கிய பகுதியான மவுஸ் கிருமிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கழிவறையில் உள்ளதை விட அலுவலக கணினி மவுஸ்களில் மூன்று மடங்கு கிருமிகள் உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். 

அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் மதிய நேர உணவை அவர்கள் பணியாற்றும் மேசையிலேயே வைத்து உண்பதுடன் உணவு உண்ணும் நேரத்தில் இணையத்தை பார்வையிடுவது அல்லது தொடர்ந்து தட்டச்சு செய்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர். இதனால் உணவு பொருட்கள் கணினிகளில் குறிப்பாக, மவுஸ், கீபோர்ட் மீது படிந்துவிடுகின்றன. 

இதனால், பாக்டீரியா உள்ளிட்ட நுண் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற இடமாகவும் அவை மாறிவிடுகின்றன என்று தொழில்நுட்ப மேலாளரான பீட்டர் பாரட் கூறியுள்ளார். தற்போது குறிப்பாக அலுவலகங்களில், மின்னணு பொருட்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்படாததால் கிருமிகள் பரவுகின்றன. மேலும், பெண்களை விட ஆண்களே அதிகமாக அசுத்தமிக்கவர்களாக காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆண்கள் பயன்படுத்தும் மவுஸ்களில் மட்டும் 40 விழுக்காடு பாக்டீரியாக்கள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், மவுஸ்களுக்கு அடுத்ததாக அதிக கிருமிகள் நிறைந்த பொருளாக கணினி விசைப்பலகை உள்ளதாம். அடுத்ததாக தொலைபேசிகள் மற்றும் நாற்காலிகளில் அதிக கிருமிகள் உள்ளன. அதுமட்டுமல்லாது, அதிக கிருமிகள் கொண்டவைகளாக சமையலறை, வாகன ஸ்டியரிங், நாற்காலிகள், ஷாப்பிங் டிராலிகள், லிப்ட் பட்டன்கள் என பல இடங்களில் கிருமிகள் வாழ்வதாக ஆய்வு தெரிவிக்கிறது. எனவே வீடோ அலுவலகமோ நாம் உபயோகப்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்துக்கொண்டால்தான் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Post a Comment

0 Comments