Subscribe Us

header ads

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் சுதந்திரக் கட்சி போட்டியிடும்


எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிலைச் சின்னத்தில் கூட்டணி ஒன்றின் ஊடாக போட்டியிடு;ம் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் இந்த கூட்டணி அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய இரண்டினதும் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருவதனால் இவ்வாறு போட்டியிடுவதில் சிக்கல்கள் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடாவிட்டால் மீளவும் கசப்பான அனுபவங்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட்டால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிடும் எனவும் பின்னர் ஒன்றிணைந்து நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments