ஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணொருவர் , பின்னர் மனம்மாறி நீந்தி கரை சேர்ந்த சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் தனது கையடக்கத்தொலைபேசியில் இருந்து யார் யாருக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள போவதாக தெரிவித்த தை யடுத்தே அப் பெண் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
இதனையடுத்து அவர் நில்வளா கங்கைக்குள் பாய்ந்துள்ளார். எனினும் அவரை காப்பாற்ற எவரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அப் பெண் நீச்சல் தெரிந்தவர் என்பதால் சிறிது நேரம் நீருக்குள் இருந்து பின்னர் நீந்தி கரையை அடைந்துள்ளார்.








0 Comments